தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

ஜெயலலிதாவின் கோரிக்கையை ஐதேக நிராகரித்தது! - குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!- எரான்



பாதுகாப்பு படையில் இணைந்த 58 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கியது இராணுவம்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 03:49.51 PM GMT ]
சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உதயப்பெரேரா, யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் றொகான் டயஸ், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள இளைஞர் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்தி
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq5.html
இலங்கையில் இனப்படுகொலை என்ற ஜெயலலிதாவின் கருத்தை கெஹலிய கண்டித்துள்ளார்!
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 04:18.59 PM GMT ]
இலங்கையில் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கூறியிருப்பதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பில் இலங்கை இந்திய மத்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ ஆட்சேபனையை வெளியிடவுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு அரசியல்வாதி ஒருவரால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெயலலிதாää இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை கண்டித்துள்ள கேஹலிய ரம்புக்வெல்லää இனப்படுகொலை என்ற சொல் பிழையான அர்த்தத்தை கொடுக்கும் சொல்லாகும் என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா எதனைக் கூறினாலும் இந்திய பிரதமர் மோடி சரியான நிலைப்பாட்டை எடுப்பார் என்று கெஹலிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeq7.html
ஜெயலலிதாவின் கோரிக்கையை ஐதேக நிராகரித்தது! - குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!- எரான்
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 12:41.00 AM GMT ]
இலங்கை தமிழர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கி சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரியுள்ளமையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த நிராகரிப்பை கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் எல்லை சுதந்திரம் என்பவற்றை பாதுகாத்து வருகிறது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சர்வஜன வாக்கெடுப்பு கொள்கையை ஐக்கிய தேசியக்கட்சி எதிர்த்தாலும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது வெளியாரின் தலையீடுகள் தவிர்க்கப்படவேண்டும் என்றும் எரான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்கு இன்னமும் இலங்கை அரசாங்கத்துக்கு வாய்ப்புள்ளதாக எரான் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தராதாரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் - எரான் விக்ரமரட்ன
குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடுகின்றனர், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான கருத்துக்கள் மூலம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். அனைவரும் நாம் இலங்கையர் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டும்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து பேசப்படுகின்றது. சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாற்றுக் கருத்துக்கிடையாது.
குற்றவாளிகளின் பெயர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். சுங்கத் திணைக்களம் ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனமாகவே மக்களினால் கருதப்படுகின்றது, இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் தலையீடுகளை முற்று முழுதாக தடுக்க ஆவன செய்ய வேண்டும்.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகளவில் செலவிடுவதனால் மட்டும் அபிவிருத்தியை ஏற்படுத்திவிட முடியாது.  உற்பத்தியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZer3.html
இலங்கையுடன் இரகசிய உடன்படிக்கை இல்லை: சர்வதேச நாணய நிதியம்
[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 02:12.35 AM GMT ]
இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள பல உப உடன்படிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தநிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகளின் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர் நேற்று ரைஸிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது தாம் எழுதி வைத்திருந்த பதிலை ரைஸ் வாசித்தார். அதில் தம்முடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இலங்கை 2012 ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்து விட்டதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து தற்போது இலங்கை அரசாங்கத்துடன் எந்த நிதிக் கொடுப்பனவு உடன்படிக்கைகளும் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார்.
அத்துடன் பிரதான உடன்படிக்கைகளுக்கு புறம்பாக வேறு உடன்படிக்கைகள் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZes0.html

Geen opmerkingen:

Een reactie posten