தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

வடக்கு முதல்வரின் செய்திக் கட்டுப்பாட்டு: சர்வேதச தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்!

யோசனையாவது சமர்ப்பியுங்கள்! த.தே.கூட்டமைப்பிடம் கெஞ்சும் அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 03:23.36 AM GMT ]
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம் கடந்த வருடத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முனைப்பை ஆரம்பித்தது.
எனினும் அதில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன பங்கேற்பதில்லை என்று அறிவித்து விட்டன.
எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாகவே காணப்பட வேண்டும் என்று அரசாங்கம் இதுவரை வலியுறுத்தி வருகிறது.
எனினும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் தீர்மானம் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகிறது.
இந்தநிலையில் இந்திய அரசாங்கமும் 13வது சரத்தை அமுல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமையால், தெரிவுக்குழுவுக்கு வராவிட்டாலும் யோசனையையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூட்டமைப்பை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgt0.html

வடக்கு முதல்வரின் செய்திக் கட்டுப்பாட்டு: சர்வேதச தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 02:23.18 AM GMT ]
ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்காக தனது அலுவலகத்திற்கு வருவதற்கு வடமாகாண சபை முதலைமச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருப்பது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கை என்றும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறும் ஒரு செயல் என்றும் சர்வேதச தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம்
கண்டித்திருக்கிறது.
வட மாகாண சபை தொடர்பிலான பொதுமக்களின் அக்கறைக்குரிய விடயங்கள் பற்றி நேரடியாக சென்று சரியான முறையில் உள்ளதை உள்ளபடி அறிக்கையிடுவதற்கு ஊடகவியலாளர்கள் முதலைமச்சரின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தகவல்களை உறுதிப்படுதித்திக் கொள்வது அவர்களது முக்கியமான தொழில்சார் கடமைகளில் ஒன்று என்று தெரிவித்திருக்கும் சர்வேதச தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம்,
ஆதலால் முதலமைச்சர் தனது தீர்மானத்தினை மறுபரிசீலைன செய்து ஊடகவியலாளர்கள் வழமை போல நேரடியாக அங்கு சென்று சுயாதீனமாக தகவல் சேகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சர்ச்சைக்குரிய வட மாகாண சபை அமைக்கப்பட்ட காலம் முதல் வட மாகாண ஊடகவியலாளர்கள் தமது சுயாதீன செய்தி அறிக்கையிடல்கள் மூலம், எந்த நிலையில் இந்த மாகாண சபை செயற்படுகிறது, எந்தளவிற்கு மக்களின் தேவைகளை இந்த சபையினால் செய்ய முடிந்திருக்கிது, அதன் அதிகார வரையறைகள், குறைபாடுகள், சவால்கள் மற்றும் அதன் பொருத்தப்பாடு என்பவை என்ன என்ற யதார்த்த நிலையினை சிறந்த முறையில் வெளிப்படுதித்தி வந்துள்ளனர்.
ஆனால், இந்த சுயாதீன தகவல் சேகரிப்பிற்கு தடை ஏற்படுத்தி தகவல் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் இனிமேல் செய்தி ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதானது, வடிகட்டிய தகவல்கைள மட்டும் வழங்கி உண்மை நிலைமையினை மூடிமைறத்து ஒரு போலியான அரசியல் கருத்து வினைப்பாட்டை உருவாக்கும் ஆபத்தினைக் கொண்டிருக்கிறது.
வடமாகாணசைபயின் செயற்பாடுகள் மட்டுமல்லாது அதன் போதாமைகள், அதிகாரம் மறுக்கப்பட்டுள்ளைம போன்ற விடயங்களை சர்வேதச சமூகம் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் செய்தியாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மாகாணசபை பற்றிய தவறான கருத்துருவாக்கத்தை உருவாக்கவே பயன்படும் என சர்வேதச ஊடகவியலாளர் சங்கம் கருதுகிறது.
ஆகையால், முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செய்தி சேகரிப்பிற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்று சர்வேதச ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgs7.html

Geen opmerkingen:

Een reactie posten