தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

தென்னாப்பிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்- அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிப்பது தொடர்பில் ஆராயும் முகமாக தென்னாப்பிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை பயணிக்கவுள்ளகதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ர மபோஷா இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த நவம்பர் மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஷீமாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக- சிறில் ரமபோஷா இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
விசேட பிரதிநிதி முதலில் இலங்கை அரசு தரப்பினரையும்- பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் தென்னாபிரிக்காவுக்கு அழைத்துப் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த மாதம் முதல் வாரத்தில் அவர் இலங்கைக்கு பயணிப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்- தென்னாபிரிக்கத் தேர்தல்கள் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மாத இறுதியில் அவர் இலங்கைக்குப் பயணம் செய்வார் என இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குப் பயணம் செய்யும் ரமபோஷா- வடக்கு கிழக்கு மாகாணங்களையும் நேரடியாகப் பார்வையிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/71518.html

Geen opmerkingen:

Een reactie posten