தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

இலங்கை சித்திரவதைகளுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் தீக்குளிக்கும் அகதிகள்!


புகலிடம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று தஞ்சமடைந்த மற்றுமொரு இலங்கை பிரஜை தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த 40 வயதுடைய இலங்கையர் தற்காலிக விசாவில் தங்கியிருந்த சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் அகதிகள் பேரவை அறிவித்துள்ளது.

இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள டன்டெனோங் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் நோபல் பார்க் எனும் இடத்தில் வசித்து வருபவர் என்றும் 2012ஆம் ஆண்டு படகின் மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர் என்றும் தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மீண்டும் திரும்பிச்சென்றால் சித்திரவதைகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தினாலேயே இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்ள குறித்த நபர் முயற்சித்த போது அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் லியோ சீமான்பிள்ளை என்ற இலங்கை அதிக தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் மாதம் மற்றுமொரு அகதி உடம்பில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்தபோதும் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு இலங்கை அகதியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தற்கொலை முயற்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் அகதிகள் பேரவை பேச்சாளர் ஸ்ரீசாமி தெரிவித்துள்ளார். 7 இளைஞர்கள் இதுபோல தற்கொலைக்கு முயற்சிக்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403383225&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten