83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது - சக வீரர்களின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இராணுவத்தினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 08:00.59 AM GMT ]
தம்பகல்ல கங்கொடகம, தலாவ பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண்மணியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி, சந்தேக நபரின் மனைவியின் பாட்டி என பொலிஸார் தெரவித்துள்ளனர்.
83 வயதான பெண்மணி வேறு வீட்டில் தனித்து வசித்து வந்துள்ளார். விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த இராணுவ வீரர் கடந்த 31ம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் பெண்மணி வீட்டுக்குள் புகுந்து விளக்கை அனைத்து விட்டு அவரை இரண்டு முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மதுபோதையில் இருந்த சந்தேக நபர், கட்டிலிலேயே நித்திரை செய்துள்ளார். மூதாட்டி விளக்கை ஏற்றி சந்தேக நபரை கண்டு சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் துணியால் அவரது வாயை மூடியுள்ளார்.
பெண்மணி சத்தமிடுவதை கேட்ட அங்கம் பக்கத்தவர்கள் பெண்மணியின் வீட்டுக்கு சென்றதை அடுத்து சந்தேக நபர் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2ம் இணைப்பு
சக இராணுவ வீரர்களின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இராணுவத்தினரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
50 வயதான பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று இராணுவத்தினரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ஸ்ரீ மேவன் மஹேந்திர இன்று உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ கோப்ரல் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரின் மனைவியும் இரண்டு இராணுவ வீரர்களின் தாயுமான பெண்ணையே சந்தேக நபர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நொச்சியாகம லிந்தவெவ இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தனர்.
2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி இரவு அதிக மதுபோதையில் இருந்ததுடன் இந்த பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZft3.html
ருகுணு மாணவர்களை நான் தாக்கவில்லை!- சனத் ஜயசூரிய மறுப்பு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 08:59.21 AM GMT ]
கிராமவாசிகள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே தான் மூன்று தினங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சென்றதாகவும், தனது கிராமத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் உரிமை தனக்கு இருப்பதாகவும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ருகுணு பல்லைக்கழகத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நடத்த வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட நான் 10, 15 நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கவில்லை.
கிராம மக்கள் கையெழுத்திட்டு கொடுத்த மகஜரை பெற்றுக்கொண்டு நான் ஜனாதிபதியைச் சந்திக்க புறப்பட்டு விட்டேன்.
எவராவது தாக்குதலுக்கு உள்ளானதாகவோ, காயமடைந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவோ பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை.
இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது எனவும் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கிரிக்கெட் மைதானத்தில் பந்துகள் உடைய கிரிக்கெட் மட்டையால் பந்துகளை விளாசிய மாஸ்டர் பிளாஸ்டர் என்ற சனத் ஜயசூரிய, தற்பொழுது மாணவர்களின் மண்டைகளை பிளந்து வருவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை ருகுணு பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எதிராக மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த போது சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்ததுடன், தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டவர்கள் மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZft5.html
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் - தர்மபால சந்ததியினர் அமைப்பு
[ புதன்கிழமை, 04 யூன் 2014, 10:02.12 AM GMT ]
அந்த அமைப்பின் தலைமை சபையின் சார்பில் பலாங்கொட சோபித தேரர் மற்றும் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளனர்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது நாட்டில் இருந்து வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதி மற்றும் சுதந்திரமான சூழல் உங்களது ஆட்சியில் நடந்த மாபெரும் காரியமாக காண்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் சுதந்திரத்தை நீண்டகாலம் தக்க வைக்க வேண்டுமாயின் பிரிவினைவாதத்திற்கு காரணமாக சகல சாதக பாதகங்களையும் முற்றாக ஒழிக்க வேண்டும்.
பிரிவினைவாதத்திற்கு காரணமாக அமையும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் போன்ற பலவந்தமாக திணிக்கப்பட்ட ஏற்பாடுகளை நீக்கி, எதிர்கால இலங்கையில் நாட்டின் சகல பிரஜைகளும் ஒற்றுமையாக வாழவும் சர்வதேச எதிர் சக்திகளை தடுக்கவும் வலுவான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
உள்நோக்கம் மற்றும் அரசியல் தந்திரத்தின் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகள் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்காது இருந்து வருகின்றன என்பது தெளிவாகியுள்ளது.
இது எப்படி இருந்தாலும் மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்று புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
அதேவேளை இலங்கையின் உள்நாட்டு அரசியல் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கமேயன்றி, வெளிநாடுகள் அல்ல என அரசாங்கம் அறிவித்திருப்பது சிறந்த அடையாளமாக நாங்கள் காண்கின்றோம்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில், வெளிநாடுகள் இலங்கை அரசியல் அமைப்பின் சில திருத்தங்களை அமுல்படுத்துமாறு கோருவது மற்றும் அழுத்தங்களை கொடுப்பதற்கு நாடு என்ற வகையில் இலங்கை பதிலளிக்க தேவையில்லை.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் பிரிவினைவாத அதிகார மோகம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமேயன்றி தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாது.
இதனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல மக்களும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் ஒரு நாட்டுக்குள் வாழ்க் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதே இன்று நாடு மற்றும் ஜனாதிபதியான உங்கள் முன்னால் இருக்கும் பிரதான சவலாகும்.
இதனை எதிர்கொள்வதை முதன்மையான விடயமாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் தர்மபால சந்ததியினர் அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTYLZft6.html
Geen opmerkingen:
Een reactie posten