[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 06:07.04 AM GMT ]
சுயாதீன தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் நான் அரசியல் எதிர்வுகூறல்களை மேற்கொள்ள போவதில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வேட்பாளராக போட்டியிட முடிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றி குறித்து சந்தேகம் ஏற்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வருடா வருடம் என்னை வந்து சந்திப்பார்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்ற பின்னர் அவரும், நாமல் ராஜபக்சவும் தன்னை அவமதித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பேர் தமது எதிர்காலம் பற்றி என்னுடன் சோதிட ரீதியாக கலந்துரையாடுகின்றனர்.
நான் சோதிடம் பார்ப்பதற்கு வெளிநாட்டவரிடம் 5 ஆயிரம் ரூபாவையும் உள்நாட்டவர்களிடம் ஆயிரத்து 500 ரூபாவையும் அறவிடுகிறேன்.
ஜனாதிபதி 8 ஆம் திகதிக்கு பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தது. அது நாட்டுக்கு நல்லது.
2009 ஆம் ஆண்டு அலரி மாளிகைக்கு சென்ற நான் இறுதியாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அங்கு சென்றேன்.
தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளராக 47 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு சென்றேன். பின்னர் அந்த சம்பளம் 87 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
அத்துடன் மாதாந்தம் 250 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவும் கிடைத்தது. அதில் 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் நான் எடுத்துக்கொண்டதில்லை என்றார்.
சுமணதாச அபேகுணவர்தன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என கூறியிருந்தார். அத்துடன் தேர்தல் அறிவிக்கும் நேரத்தையும் அவரே மகிந்த ராஜபக்சவுக்கு கணித்து கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmv6J.html
அரசியலமைப்புத் திருத்தம் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 06:15.44 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்களின் ஆணைக்கு அமைய மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தின் தன்னிச்சையான அதிகாரங்களை நீக்குதல், தேர்தல் முறையில் மாற்றம் செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்பட வைப்பது, தகவல் அறியும் சட்டம், மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்க நெறி கோவை போன்ற சட்டமூலங்கள் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடவும்,விவாதிக்கவும் போதுமான காலம் வழங்கப்பட வேண்டும்.
திடீரென அவசரமாக அவற்றை கொண்டு வரவோ, நிறைவேற்றவோ கூடாது. இது குறித்து விரிவாக கலந்துரையாட மக்களுக்கும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கும் போதிய கால அவகாசத்தை வழங்க வேண்டும்.
மாளிகை சதித்திட்டங்கள் மற்றும் இரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படக் கூடாது. அத்துடன் அதனை தமது குறுகிய அரசியல் தந்திர வழிகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படக் கூடாது எனவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmv7B.html
ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 07:00.40 AM GMT ]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை கடந்த 10ம் திகதி அரசாங்கம் பிணையில் விடுதலை செய்தது.
தமிழ் சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கையாக இது உள்ளது.
அத்துடன். இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை நோக்கிய சாதகமான நடவடிக்கை எனவும் ஜென் சகி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmv7D.html
மகிந்தவிடமிருந்து எனது குடும்பத்தை பாதுகாக்கவே நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன்: மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 07:06.06 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் என்னைக் கைது செய்து, குடும்ப உறுப்பினர்களை அழிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.
தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் நான் உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் உயிருடன் இருந்திருப்போமா என்பது தெரியவில்லை. அதுதான் மஹிந்த ராஜபக்சவின் ஜனநாயகமாகும். ஆனால் அவர் இப்பொழுது ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அன்றைய தினம் நான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், எத்தனை பேரின் கை கால்கள் உடைக்கப்பட்டிருக்கும், எத்தனை பேரின் தொழில்கள் இழக்கப்பட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாது. அப்படி இல்லை என்றால் மகிந்த ராஜபக்ச எனது முழு குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகிந்தவை பிரதமராக்குமாறு கோரிக்கைகள் கிடைக்கவில்லை: ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு இவ்வாறான ஓர் கோரிக்கையை யாரும் இதுவரையில் தன்னிடம் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான கோரிக்கை அல்லது யோசனையை முன்வைத்தால் அன்று நான் உரிய பதிலை அளிப்பேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயம் தாமே என மஹிந்த தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக பி.பி.சி சேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவியதற்கு உண்மையில் கட்சியின் இதயம் மக்களே என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இதயமும் மூளையும் மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் அர்ப்பணிப்புக்களை மறந்துவிட முடியாது: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 07:25.49 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் பிபிசி செய்தி சேவைக்கு அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
19ம் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமாக பாராளுமன்றத்தில் முன்வைப்பதில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்ட போது எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு அவசரமாக இதனை கொண்டு வருகின்றீர்கள் என்று கேட்டார்கள்.
எனவே 19ம் திருத்தச் சட்டமும் அவசர அவசரமாக முன்வைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நூறு நாள் திட்டத்திற்குள் அதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் முறையில் மாற்றம் வேறு, திருத்த சட்டம் வேறு. இவை இரண்டும் வெவ்வேறு என்றும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி தலைவர்களுடன் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறித்த கூட்டத்தில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல்களில் எட்டப்படுகின்ற தீர்மானங்களுக்கமைய எதிர்வரும் காலங்களில் செயற்படவுள்ளோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் அதீத அதிகாரங்கள் நீக்கப்படும் என்ற வாக்குறுதியே அளிக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSXSUmv7F.html
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு பல்வேறு இடர்பாடுகள் உண்டு. கிராஞ்சி அ.த.க.பாடசாலையில் சி.சிறீதரன்
[ வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015, 07:42.36 AM GMT ]
கிராஞ்சி பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் நிகழ்வுகள் கடந்த 11 நாள் சிறப்பாக நடைபெற்றது,இதில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக வலைப்பாடு பங்கு தந்தை ஏ.பி.சில்வெஸ்ரர்தாஸ், கிராஞ்சி கிராம சேவையாளர் கு.கணேசமூர்த்தி ,நலன்விரும்பி த.பத்திநாதர் உட்பட பூநகரி கோட்டத்தின் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு மதிப்பளித்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு பொதுவாக பல்வேறு இடர்பாடுகள் உண்டு.தண்ணீர் பிரச்சினை,போக்குவரத்து,மண் அகழ்வு உட்பட மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகள் பல உண்டு.
எனினும் இந்த மண்ணில் இருக்கின்ற பற்றுக்காரணமாக அதிபர்கள்,ஆசிரியர்கள் வேறு பொதுப்பணியைச் சேர்ந்தவர்களும் இந்த மாணவர்களின் நன்மை கருதி இடையறாத முயற்சிகளால் கல்வித்தரம் போன்றவற்றை பேணிவந்தாலும் நிவர்த்தி செய்யப்படவேண்டிய அவசியமும் அவசரமுமான பணிகளை நான் உணர்கின்றேன்.
இந்த பாடசாலையில் ஆண்டு 6 தொடக்கும் 11 வரையான மாணவர்களுக்கு இதுவரை கணித,விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை என்ற வேதனையான சேதியை அறிந்துள்ளேன்.இந்த வருடமும், அடுத்த வருடமும் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவுள்ள மாணவர்களின் நிலை என்ன அவர்களின் எதிர்காலம் என்ன இது தொடர்பாக பெற்றோர்கள் ஏக்கம் வெளியிட்டுள்ளனர்.இவற்றை புரிந்துகொள்கின்ற நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்க நான் செயலாற்றுவேன் என தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.
இங்கிருக்கின்ற மாணவர்கள் அயலில் உள்ள முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சென்று கணித விஞ்ஞான பாடங்களை கற்கவேண்டிய சூழ்நிலையை மாற்ற உரியவர்களோடு நான் தொடர்புகொண்டு தீர்வை ஏற்படுத்துவேன் என்பதையும் உறுதி கூறுகின்றேன்.விளையாட்டுப் போன்ற புறச்செயற்பாடுகளுக்கு அப்பால் கல்வியே பிரதானமாக உள்ள நிலையில் அவற்றிற்கான வளங்கள் நிறைவாக இருக்கவேண்டியது மிக அவசியமே என தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten