தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 maart 2015

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் வைத்து கைது!

மகிந்தவை மாற்றிய புரட்சி சாதாரண நாற்காலியை மாற்றும் புரட்சியல்ல!– சம்பிக்க ரணவக்க
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 01:54.30 PM GMT ]
நாட்டின் ஆட்சி மாற்றத்தை சிலர் நாற்காலி மாற்றம் எனக் கூறுகின்றனர் எனவும் கடந்த ஆட்சியின் மகிந்தவை வணங்கி மகாராஜா எனக் கூறிக்கொண்டு அவர் கூறிய அனைத்தையும் செய்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் இதனை சாதாரணமான நாற்காலியை மாற்றிய புரட்சி என நினைக்கின்றனர் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
கண்டியில் அண்மையில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இவர்கள் மகிந்தவை வணங்கி கொண்டு அனைத்தையும் செய்தனர். தற்போது இந்த பக்கத்திற்கு வந்தும் இதனை செய்கின்றனர். சில ஊடகங்களும் அப்படித்தான் செயற்படுகின்றன.
இது வழமையான நாற்காலியை மாற்றும் புரட்சியல்ல. தெளிவான ஆட்சி மாற்றப் புரட்சி.
நாட்டு மக்களுக்கு தேவையான ஜனநாயக அரசியல் தேவையை நிறைவேற்றுவதற்காக செய்ய வேண்டிய ஆட்சி மாற்ற புரட்சியே நடந்துள்ளது.
தனிப்பட்ட கோபத்திற்காக மகிந்தவை தோற்கடிக்க முன்வரவில்லை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUmozB.html


இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பங்கு - ஜோன் கெரி பாராட்டு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 03:52.32 PM GMT ]
இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில், உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி,சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வகித்த பங்குக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
உயர்மட்டப் பிரதிநிதிகளின் உரை அமர்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

பர்மா, சிறிலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவர்களின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை ஊக்குவித்து உண்மையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பங்காற்றியுள்ளது.

அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை நிச்சயம் மாற்ற முடியும். எனினும் அது ஒரே இரவில் நடந்து விடாது. அழுத்தங்களின் மூலம் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும், சுதந்திரத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்

.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUmozH.html

பிரான்ஸ் செல்லவிருந்த தாயும் மகளும் கட்டுநாயக்காவில் வைத்து கைது!
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 04:14.57 PM GMT ]
பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும், மற்றும் தாயும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அத்துடன் கைது செய்யப்பட்ட மகளும் தாயும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் இன்று திங்கட்கிழமை காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்துவிட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்கள்(Passport) கொடுத்தபோது  விமானநிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பகீரதியின் மகள்  பகல்வி(8 வயது) பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவராவார். 
இதேவேளை, இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டு  உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்  மங்கள சமரவீர், இலங்கையில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்திருந்த வேளையில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இவ்வாறு தாயும் மகளும் கைதாகியுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மஹிந்த ஆட்சியின் போது விமான நிலையத்தில் வைத்து தமிழ்ப் பயணிகள் கைது செய்யப்படுவதைப் போன்றே தற்போதைய மைத்திரி சிறிபால சேனவின் ஆட்சியிலும் இக்கைது நடைபெற்றுள்ளதை நோக்குகையில் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சில்  எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லையே என எண்ணத்தோன்றுகிறது? இவ்வாறான நடவடிக்கையில் தற்போதும் கோத்தாவின் அதிகாரங்கள் இலங்கையில் தலைதூக்கியுள்ளனவா என சந்தேகிக்க தோன்றுகிறது?
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUmozI.html

Geen opmerkingen:

Een reactie posten