தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 18 maart 2015

பிரித்தானியாவை வென்றது முழு ஐரோப்பாவையும் வென்றததற்கு ஈடானது: ஜனாதிபதி

அரசாங்கம் குறித்து அரசாங்கத்திற்கே நம்பிக்கை இல்லை: புத்திஜீவிகள் சங்கம்
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 09:19.51 AM GMT ]
நாட்டின் இன்றைய அரசாங்கத்திடம் நாட்டின் எதிர்காலம் சம்பந்தமான தொலைநோக்கு இல்லை என கொழும்பு புத்தி ஜீவிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பபட்டு வந்திருந்த  நாடு தற்பொழுது கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான மகேந்திரன் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக கூறிக்கொண்டு தங்களது சொந்த அரசியல் இலக்கை அடைவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 10:08.17 AM GMT ]
காணாமற் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமற் போனோர் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றினை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது.
அறிக்கை தொடர்பிலான சகல விடயங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 03 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்ற திருகோணமலை பிரதேசத்தில் 303 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 294 முறைப்பாடுகள் நேரடியாக சென்று கொடுக்கப்பட்டவை, 128 வாய்மூல சாட்சியங்கள், அத்துடன் நேரடியாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 175 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்ற அதேவேளை, சுமார் 474 புதிய முறைப்பாடுகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவினால் இதுவரையில் 20,106 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன். அவற்றுள் கிட்டத்தட்ட 5000 முறைப்பாடுகள் பாதுகாப்பு பிரிவினரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா இலங்கை தொடர்பான உள்ளூர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவை வென்றது முழு ஐரோப்பாவையும் வென்றததற்கு ஈடானது: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 18 மார்ச் 2015, 10:44.15 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டுக்கும் ஆதரவாக குரல் கொடுக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு செய் நன்றி மறக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பிரதானிகளை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் என்பது தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமான சட்டவாக்கத்தினர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்குவோர் இடையில் தற்போது இது தொடர்பபன விவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இது மிக சிறந்த நிலைமையாகும்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை முன்வைக்க இரண்டு வார காலம் வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை தனது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, அண்மையில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின் போது, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து சிறந்த புரிந்துணர்வை பெற்றுக்கொள்ள முடிந்தது.
விசேடமாக அந்த சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி பயணிப்பது மிகவும் முக்கியமானது.
இங்கிலாந்துக்கு விஜயம் செய்து, பிரதமர் டேவிட் கமரூனுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றியளித்தன. பிரித்தானியாவின் மனதை வென்றதானது, முழு ஐரோப்பாவையும் வென்றதற்கு ஈடானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDScSUlp4B.html


Geen opmerkingen:

Een reactie posten