இந்தியாவை தள்ளிவைத்து இலங்கை ஒன்றும் செய்ய முடியாது இந்தியா நினைத்தால் இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைக்க முடியும் எமக்கு இந்தியாதான் எல்லாமே! என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் கூட்டம் மேற்படி கட்சியின், மாவட்டக் கிளையின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தலைமையில் சனிக்கிழமை (14) மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் இடம் பெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எனக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் திட்டமிட்டு ஒரு கூட்டத்தினரால் உருவாக்கப்பட்டது. நான் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு விரோதமாகா செயற்பட்டவன் அல்ல. அதே போன்று புலிகளுக்கு எதிராக செயற்பட்டவனும் அல்ல. நான் சில உண்மைகளையும், புத்திமதிகளையுமே எடுத்துக் கூறினேனே தவிர புலிகளின் போராட்டத்தினை ஒரு போதும் கொச்சைப் படுத்தவில்லை.
நான் விடுதலை புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் என்மீது சுமத்தப்பட்ட கூற்றச்சாட்டு. இது தவறானது நான் சில குறிப்பிட்ட விடயங்களுக்கு விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வேன். அதாவது இனப்பிரச்சினை சம்மந்தமாக அரசாங்கத்துடன் பேசுவதற்கு அதனை முன்னெடுத்தல் போன்ற சில விடயங்களுக்கு அவர்கள் தான் ஏகபிரதிநிதி என்பதனை நான் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.
எனவே, எமக்கு எல்லாமே இந்தியாதான் இந்தியாவை தள்ளி வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இந்தியா நினைத்தால் இலங்கை அரசாங்கத்தினை அடிபணியவைக்;க முடியும். ராஜீவ்காந்தி என்ன செய்தார்? இதனை அறியாமல் செயற்பட முடியாது. நாங்கள் நிதனமாக அரசியல் செய்ய வேண்டும். இதனையே எடுத்துக் கூறிவருகின்றேன். இதற்காகவே ஜனாதிபதிக்கு இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தேன் என்றார்.
|
Geen opmerkingen:
Een reactie posten