இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா : மோடி திட்டவட்டம்
0
ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எடுத்துக் கொண்ட பணிகளை செய்து முடிப்போம்: யாழ் மக்களுக்கு உறுதி வழங்கிய மோடி !
0
யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
யாழ் நூலகத்தில் இன்று யாழ்ப்பாண கலாச்சார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களில் ஒன்றுப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள்.யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி.
யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புராதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்ததுடன் அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.
பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம்.
நூலகம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம். எடுத்துக்கொண்ட பணிகளை எதிர்ப்பார்ப்புக்களையும் தாண்டி செய்து முடிப்போம்.
யாழில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீட்டுத்திட்டம், வீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமையும்.
தலைமன்னார் ரயில் பாதையை திறந்து வைத்து, கலாச்சார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது, வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைப்பது என்பன திரிவேணி சங்கம் போன்றது என தான் கருதுவதாகவும் இந்திய பிரதமர் மோடி கூறினார்.
வடகிழக்குத் தமிழர்களின் கருத்துக்களை கேட்டறியாது 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது: விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார்!
0
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதித் தீர்வுத் திட்டமாக அமையாது.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை எட்ட இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ளாது 13ம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten