தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 juli 2015

எளிமையாக வாழ்கிறாராம் KP: இலங்கை அமைச்சர் கே.பி முதுகை சொறிந்துள்ளார் ! ]


முல்லைத் தீவிலுள்ள "பாரதி" இல்லத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் சென்றிருக்கிறார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு முகாமாக .இந்த பாரதி இல்லத்தினை கே.பி. நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வில்லத்துக்கு திடீரென விஜயம் செய்த சுவாமிநாதன், கே.பி.யை அடையாளம் கண்டுகொள்ளாமல் யார் நீங்கள் என வினவியுள்ளார். அதற்கு கே.பி தான் தான் குமரன் பத்மநாதன் என்று கூறியுள்ளார். உடனே சுவாமி நாதன் , நீங்கள் ரெம்பவும் எளிமையாக இருக்கிறீர்கள் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. "எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகீட்டீங்களே என்பது போல"
அதற்கு கே.பியும் நீங்கள் ஆரவாரம் இல்லாமல் முல்லை வந்து இருக்கிறீர்கள். பொதுவாக அமைச்சர் முல்லைத்தீவு வருவதாக இருந்தால் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். நீங்களும் ஒரு வகையில் எளிமையாக தான் செயல்பட்டு வருகிறீர்கள் என்று கூறியுள்ளார். ஒருவர் முதுகை ஒருவர் சொறிய , அறிவித்தல்களை விடுத்துள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten