தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 juli 2015

சபாஷ் சரியான போட்டி: இவர்கள் இருவரும் மோதுவது தற்போது உறுதியாகிவிட்டது !

பிள்ளையான மகிந்த கட்சியில் இணைகிறான்: பொது தேர்தலில் இணைந்து போட்டி !

[ Jul 13, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 3260 ]

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதை அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். அந்த முன்னணியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளை அடுத்தே தமது கட்சி அவர்களுடன் இணைந்து போட்டியிடும் முடிவை எடுத்தனர் என அவர் கூறுகிறார்.
இலங்கையின் கிழக்கே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எட்டப்பட்டது எனவும் சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாவிட்டாலும், தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழலை மனதில் வைத்தே இம்முறை போட்டியிடும் முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் மேலும் கூறினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமது கட்சியின் சார்பில் எட்டுபேர் போட்டியிடவுள்ளதாக கூறும் அவர், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு தாங்கள் வாய்ப்பளிக்க முன்வந்த போதிலும் அவர் அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சபாஷ் சரியான போட்டி: இவர்கள் இருவரும் மோதுவது தற்போது உறுதியாகிவிட்டது !

[ Jul 13, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 6660 ]

தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சில விடையங்கள் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளது. இந்த இரண்டு சிங்கள தலைகளும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்துள்ளார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஏற்கனவே கொழும்பு மாவட்டத்தில் தனது ஜனநாயக கட்சி சார்பில் தனித்துப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதிக்கம் அதிகரித்து, அவர் குருநாகலவில் போட்டியிடவுள்ள நிலையில், சரத் பொன்சேகா கொழும்பில் தனது வேட்புமனுவில் இருந்து விலகி, குருநாகலவில் ஐதேகவின் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சிறப்பு பதவி ஒன்றை அளிக்கவும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, குருநாகலவில் உள்ள கிறீன்பீல்ட் விடுதியில் தனது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தாம் வடமேல் மாகாணத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். “சிறையில் இருந்து விடுதலையான பின்னர், மேல் மாகாணத்தில் இருந்தே அரசியலை ஆரம்பித்தேன். உள்நாட்டு அரசியலில் குருநாகல மாவட்டம் மிக முக்கியமான இடமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இங்கு பெரியளவு வாக்கு வங்கி உள்ளது. இந்த தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் வெற்றிலை தோற்கடிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். குருநாகல மாவட்டம் சிறிலங்காவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மூன்றாவது மாவட்டமாகும். இங்கு அதிகளவில் சிறிலங்காப் படையினரும், ஓய்வுபெற்ற படையினரும், போரில் இறந்த படையினரின் குடும்பங்களும் வாக்காளர்களாக உள்ளனர். சரத் பொன்சேகா களமிறங்கினால், போர் வெற்றியை மையப்படுத்திய பரப்புரைகளின் மூலம், குருநாகலவில் மகிந்த ராஜபக்ச பெறக் கூடிய வாக்குகள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten