தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

வட,கிழக்கு இணைந்தால் மண்ணின் அடையாளம் காக்கப்படும்: யோகேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 08:59.23 AM GMT ]
”எதிர்காலத்துக்கு உத்தரவாதம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியானது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.
எனினும், இந்த நிகழ்வில் ஐக்கிய முன்னணியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
“நாட்டுக்காக உயிர் கொடுப்போம்….புதிதாக ஆரம்பிப்போம்” என்று அறைகூவல் விடுத்திருக்கும் மேற்படி தேர்தல் விஞ்ஞாபனம், மாற்றத்துக்கான மாற்றம் எனும் உப தலைப்பில் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலம் பற்றிப் பேசுகிறது.
அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்காத சாதாரண சமூகமொன்றை ஸ்தாபித்தல், பொருளாதார அபிவிருத்தியோடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்,
ஒரே தேசத்துக்குள் ஜாதி, மத அடிப்படையிலான சுதந்திரத்தோடு மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்தல் ஆகியன தொடர்பிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


வட,கிழக்கு இணைந்தால் மண்ணின் அடையாளம் காக்கப்படும்: யோகேஸ்வரன்
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 09:06.52 AM GMT ]
இலங்கைத் தீவில் நாங்கள் தேசிய இனம் எங்களால் தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
வடக்கு கிழக்கு இணைந்ததாக இருக்கும் போது தான் எமது அடையாளங்களைக் காப்பற்ற முடியும் என்ற அறிவுபூர்வமான தீர்மானத்தின் அடிப்படையிலே இணைந்த வட கிழக்கு மாநிலத்தை நாம் கோரி நிற்கிறோம் என்றும் கூறினார்.
மட்டக்களப்பு கல்குடா தொகுதியிலுள்ள கதிரவெளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்!
“எமது பாராம்பரிய தாயகமான வடகிழக்கில் மது குடிசன பரம்பலை பாதிக்கும் வகையில் அரசின் சிங்கள குடியேற்றங்களினால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். 1940 தொடக்கம் 1980 ஆண்டு காலப்பகுதியில் அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அரச காணி பகிர்ந்தளிக்கின்ற கொள்கையினால் கிழக்கு மாகாணத்தின் குடிசனபரம்பலில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.
இலங்கை சுதந்திரமடைகின்ற போது கிழக்கு மாகாணத்தில் 9 சதவீதமாக விருந்த சிங்கள மக்களின் சனத்தொகை தற்போது சுமார் 30 சதவீதமாக இயற்கைக்கு மீறிய அதிகரிப்பாக வளர்ந்திருக்கிறது.
1833 ஆண்டு காலப்பகுதியில் 19 ஆயிரத்தி 52 சதுர கிலோ மீற்றராக இருந்த கிழக்கு மாகாணத்தின் பரப்பளவு தற்போது அரைவாசியாக குறைந்து 9 ஆயிரத்தி 803 சதுர கிலோமீற்றராக சுருக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாணம் சப்ரகமுவ மாகாணம் போன்றன கிழக்கு மண்ணை கபளீகரம் செய்துள்ளன. இந்த நிலையில் தான் நாங்கள் இணைந்த வடகிழக்கு பற்றி சிந்திக்கிறோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கும் போது எம்முடைய மண்ணும் இன அடையாளங்களும் காப்பாற்றப்படும் என்ற அறிவுபூர்வமான தீர்மானத்தின் அடிப்படையில் வடகிழக்கு இணைந்த மாநிலத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் வடக்கு கிழக்கு என பிரிந்திருக்க முடியாது அவ்வாறு பிரிந்திருப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதாக அமையும்.
மட்டக்களப்பு மக்கள் எப்போதும் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள். கடந்த காலத்தில் எமது தேசியத்தை சிதைத்தவர்கள் மீண்டும் களமிறங்கியுள்ளனர். அவர்களின் போலி பிரசாரங்களுக்கு எமது மக்கள் ஏமாந்து விடக் கூடாது.
எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர எந்தவொரு தமிழரும் பாராளுமன்றம் செல்ல முடியாது இது கடந்த கால வரலாறு.
சிங்கள தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களது வாக்குகளை சேகரித்துக் கொடுக்கும் முகவர்களாக செயற்படுகிறார்கள்.
இவ்வாறு எமது வாக்குகள் சிதறும் போது 74 சதவீதம் வாழுகின்ற தமிழர்கள் இருக்கும் போது 24 சதவீதம் இருக்கின்ற முஸ்லிம்கள் இருவர் பாராளுமன்றம் செல்வார்கள்.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நான்கு பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்” என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten