சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பம் அளிக்கும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அகதிகளின் முகாமை தற்காலிகமாக விரிவுப்படுத்த உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் சூரிச் மண்டலத்தில் Wiedikon Zivilschutzanlage என்ற பகுதியில் தஞ்சம் கோருபவர்களை தற்காலிகமாக தங்க வைக்கும் முகாம் அமைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக சுவிஸில் தஞ்சம் கோரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை தகுந்த வசதிகளுடன் தங்க வைப்பதில் இடச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுடன் நடைப்பெற்ற ஆலோசனைகளை தொடர்ந்து, அகதிகள் முகாமை தற்காலிகமாக விரிவுப்படுத்த உள்ளதாக சூரிச் மண்டல நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்த முடிவை தொடர்ந்து, அகதிகள் முகாமை யூலை 20 முதல் அக்டோபர் மாதம் வரை தற்காலிகமாக விரிவுப்படுத்தப்படுகிறது.
படுக்கைகளும் முகாம்களுக்கு அளிக்கப்படவுள்ளது. கூடுதலாக படுக்கைகள் தேவைப்பட்டால், அவற்றை பக்கத்து முகாம்களில் இருந்து வரவழைக்கப்பட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும்.
எனினும், இந்த முகாமில் ஆண்கள் தொடர்ந்து 7 இரவுகள் மட்டுமே தங்க வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இரவு நேர காவலர்களையும் நிர்வாகம் நியமித்துள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten