தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 juli 2015

பிரித்தானிய விசாவில் ஒரு அதிஸ்ரம்..! நீங்களும் ஒருவரா...?


பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டு பகுதி நேரப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு ஐரோப்பிய நாடுகளை சேராத ஏனைய நாட்டினருக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடியுரிமை அமைச்சர் ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியுள்ளார்.

அத்துடன் வருகின்ற ஓகஸ்ட் மாதத்திலிருந்து இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கையைத் தொடரும் சரவ்தேச நாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 10 மணிநேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றியே தமது அன்றாட தேவைகளை பூர்தி செய்து கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சலுகையை தவறாக பயன்படுத்தி குடியுரிமைக் குற்றத்தில் ஈடுபடுவதாலேயே இந்த சலுகையை ரத்து செய்வதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் நாடுகளைத் தவிர பிற நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்குள் கல்வி நடவடிக்கையைத் தொடர நுழையும் மாணவர்களிற்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படவுள்ளது.

அத்துடன் மாணவர் விசாவில் பிரித்தானியாவிற்கு வருபவர்களுக்கான ஆங்கில அறிவையும் இனி கடுமையாக சோதிக்கவுள்ளதாக பிரித்தானிய குடியுரிமை அமைச்சர் ஜேம்ஸ் புரோகன்ஷிர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வி நடவடிக்கைக்கான அனுசரனை வழங்கும் கல்லூரிகளின் நம்பகத்தன்மை போன்றவையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்மூலம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் சலுகைகளை கட்டுப்படுத்துவதே தமது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவிற்கு கல்வி நடவடிக்கையை தொடர வருகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையை முடித்த பின்னர் மேலும் அங்கு தொடர்ந்து தங்க விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Jul 2015

Geen opmerkingen:

Een reactie posten