எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ தெரியாது என்பது நம் தமிழ்ப் பழமொழி. புற்றுக்களில் பாம்பு இருக்குமென்று அனுமானிக்க கலாமேயன்றி, இந்தப் புற்றில் இந்தப் பாம்புதான் இருக்கும் என்று அடித்துக் கூறமுடியாது. இது போன்றுதான் அரசியலும்.
அரசியல் கட்சிகளில் யார் நல்லவர், யார் மக்களை ஏமாற்றுபவர் என்பதைக் கண்டறிவது கடினம். அந்தளவிற்கு அவர்களின் நடிப்பு உச்சமாக இருக்கும்.
இந்த வகையில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அண்மைக்காலப் போக்குகள், அவரின் செயற்பாடுகள் அவர் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரு காலத்தில் தமிழ் மக்கள் வாசுதேவ நாணயக் கார தொடர்பில் நன்மதிப்புக் கொண்டிருந்தனர்.
அவரும் தமிழர்கள் விவகாரத்தில் நியாயமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த ராஜபக்வின் அரசியல் கூட்டுக்குள் சென்ற பின் அவரின் அரசியல் செயற்பாடுகள் நியாயத்துவம் அற்றதாக இருப்பதைக் காண முடியும்.
மகிந்த ராஜபக்சவோடு இணங்கிப் போனால்தான் தனக்கு ஆலோசகர் பதவி, அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் வாசுதேவ நாணயக்கார வாலாட்டுகிறார் என்று கருதிக் கொண்டால், மகிந்த ராஜபக்ச பதவியிழந்த பின்னரும் அவரை அரசியலுக்குள் கொண்டு வருவதில் வாசுதேவ நாணயக்கார அதீதமான முயற்சி செய்வது அவர் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது வாசுதேவ நாணயக்கார, மிகப் பெரியதொரு தவறை, பிழையை விட்டுள்ளார். அதனை மகிந்த ராஜபக்ச அறிந்து வைத்துள்ளார்.
எனவே தான் விட்ட தவறை மறைக்க வேண்டும் என்பதற்காக மகிந்த ராஜபக்சவுக்காக வாசுதேவ கடுமையாகப் பாடுபட வேண்டியுள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது.
பலமான அரசியல் தலைவர்கள், பெளத்த பிக்குகள், நாட்டின் மீது அக்கறை கொண்ட தேசிய பொது அமைப்புக்கள் மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்க்கும்போது, வாசுதேவ நாணயக்கார, மகிந்தவுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறார்.
பலமான அரசியல் தலைவர்கள், பெளத்த பிக்குகள், நாட்டின் மீது அக்கறை கொண்ட தேசிய பொது அமைப்புக்கள் மகிந்த ராஜபக்ச அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்க்கும்போது, வாசுதேவ நாணயக்கார, மகிந்தவுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதில் கங்கணம் கட்டி நிற்கிறார்.
அதுமட்டுமன்றி மகிந்தவின் அரசியல் பிரவேசத்திற்காக பொய்யான பிரசாரங்களை - தவறான அரசியல் தகவல்களை வெளிப்படுத்தி மக்களை திசை திருப்புவதிலும் அவரின் நரி வேலை தொடர்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த போட்டியிடுவதற்கு சுசில் பிரேமஜயந்த அனுமதி அளித்துவிட்டார் என்பதை மட்டும் தெரிவிக்காமல், கூட்டமைப்பின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அனுமதித்து விட்டார் என்பது போன்ற போலிப் பிரசாரங்களை வாசுதேவ நாணயக்கார செய்து வருவது பொதுமக்களை ஏமாற்றும் போக்குடையது.
பதவிக்காக - பணத்திற்காக உண்மைகளை பொய்யாக்க நினைப்பது மிகப் பெரும் தவறு. அதிலும் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மீது, சிறுபான்மை மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு வாசுதேவ நாணயக்கார மேற்போந்த பிரசாரங்களை முன்னெடுப்பது அவ்வளவு நல்லதல்ல.
இவ்வாறான அவரின் செயற்பாடுகள் வாசுதேவ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் முறையாக மாட்டுப்பட்டுள்ளார் என்ற கருத்தியலையே ஏற்படுத்தும்.
எனவே ஒரு நல்ல மனிதர் என்றிருந்த வாசுதேவ தனது சுயலாபத்திற்காக எதுவும் செய்யலாம் என நினைத்து செயற்படுவது இந்த நாட்டின் எதிர்கால அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்பதை உணர வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten