[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 01:23.23 AM GMT ]
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், இனவாதிகளுக்கு சாதகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்றே கோருகின்றது.
அரசியல் அமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தற்போதே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரப் பகிர்ந்தளிப்பு போதுமானது அல்ல எனவும் அதனைத் தாண்டிய வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததுடன், அது குறித்து இந்தியாவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
தேர்தல் காலத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களது இன சமூகங்களை திருப்திப்படுத்த சில வாக்குறுதிகளை அளிப்பது வழமையானதாகும்.
1948ம் ஆண்டு முதல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இனவாத, மதவாத்தை தூண்டி நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடாது.
சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர் உள்ளிட்ட அனைத்து இன சமூக மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் வழங்குவதாக வாக்குறுதி அளித்த மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் இன்று பல்வேறு வழிகளில் இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இனாவதிகளுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது: ஜே.வி.பி.
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 01:41.19 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டி ஆட்சி முறைமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள இனவாதிகளுக்கு சாதகத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைக்கு நாம் இணங்கவில்லை. ஜே.வி.பி கட்சி சமஸ்டி முறைமையை எதிர்க்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அவசியம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கை ஒன்றிணைப்பது தீர்வாக அமையாது.
ஒன்றிணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை நீதிமன்றிடம் சென்று இரண்டு மாகாணங்களாக ஜே.வி.பியே பிரித்தது. இந்த இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகவே இருக்க வேண்டும்.
சமஸ்டி முறைமை என்பது நாட்டை பிளவடையச் செய்யும் ஓர் முனைப்பாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளை அதிகரித்துக்கொள்ள இவ்வாறு அறிவிப்புக்களை விடுகின்றது என விஜித ஹேரத், கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் திட்டப்படியே ரணில் செயற்படுகிறார்: டளஸ் அழகப்பெரும
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 02:26.43 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பிலான மனித உரிமை நிலவர அறிக்கையின் முன்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேர்தல் திகதி ஓகஸ்ட்டில் குறிக்கப்பட்டது.
இந்தநிலையில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகளின் அறிக்கை நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக்சொல்ஹெய்மும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்று அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten