தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 juli 2015

"பெரிசா ஆசைப்படனும் டா" அப்படி என்றால் தான் சின்னதாக கிடைக்கும் ஆனால் அதுக்கும் ஆப்பு !


வரவுள்ள பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட , மகிந்தருக்கு சீட்டுக் கொடுப்பதாக இறுதியாக மைத்திரி ஒப்புக்கொண்டார். இதற்குப் பின்னால் ஒரு சதி இருப்பதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அது என்னவென்றால் , மகிந்தவுக்கு ஏற்கனவே தெரியும் எப்படி பார்த்தாலும் தனக்கு முதன்மை வேட்ப்பாளர் பதவி கிடைக்கப்போவது இல்லையென்று. ஆனால் அதுபோக ஒரு சாதாரன எம்.பி சீட்டை கூட மைத்திரி தராமல் தன்னை முற்றாகவே ஒதுக்கி விடும் சந்தர்ப்பம் இருப்பதையும் அவர் உணர்ந்துகொண்டார். இதனால் தனது ஆதரவாளர்கள் ஊடாக , மகிந்தவுக்கு முதன்மை வேட்ப்பாளர் என்ற அந்தஸ்த்தை கொடுக்கவேண்டும். அவரே பிரதமராக போட்டியிடவேண்டும் என்று ஆரவாரங்களை கட்சிக்குள் தோற்றுவித்தார்.
இதனால் கட்சிக்குள் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால் முதன்மை வேட்ப்பாளர் என்ற அந்தஸ்த்தை கொடுக்க மறுத்த மைத்திரி இறுதியாக , சாதாரண வேட்ப்பாளராக மகிந்தரை அறிவித்தார். இதுவும் மகிந்த தரப்பு கேட்டுக்கொண்டதனால் தான் நடைபெற்றுள்ளது. ஏதோ பெரிதாக கேட்டு பின்னர், தாம் அடைய வேண்டியதை அப்படியே அடைந்து விட்டார் மகிந்தர். இது தான் நடந்து முடிந்துள்ளது. இதனை எப்படியோ சந்திரிக்கா மோப்பம் பிடித்துவிட்டார். மகிந்த முதன்மை வேட்ப்பாளர் இல்லை என்று அறிவித்தபோது , மகிந்த மிகவும் சாந்தமாக இருந்தார். மேலும் அவரை சாதாரன வேட்ப்பாளராக அறிவித்தபோது , அபொழுதும் அவர் சாந்தமாகவே இருந்தார். தனது இலக்கை அடைந்த திருப்த்தி அவரிடம் காணப்பட்டது.
"இதற்கு தானே ஆசைப் பட்டாய் பால குமாரா" என்பதனை நன்கு அறிந்த சந்திரிக்கா , தற்போது மைத்திரிக்கு கடும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இவரது நகர்வால் மைத்திரி திகைத்துப்போய் உள்ளதாக கூறப்படுகிறது. அறிவிப்பை இறுதி நேரத்தில் வாபஸ் வாங்கிவிட்டு , மகிந்தருக்கு கொடுக்க இருக்கும் அந்த வேட்ப்பாளர் பதவியை வேறு யாருக்காவது ஒதுக்கவேண்டும் என்று சந்திரிக்கா கூறியுள்ளார். இதனால் மகிந்த தரப்பு , கடும் விசனம் அடைந்துள்ளது என்று கொழும்பில் இருந்து அதிர்வின் விசேட புலனாய்வு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten