தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 juli 2015

விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்திற்குள் CIA . ஊடுருவியது எப்படி ? இதோ வெளிவராத ..

உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இதனை நாம் சொல்லி நீங்கள் புரியவேண்டிய அவசியம் இல்லை. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது. அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
இறுதிப்போருக்கு முன்னரும், பின்னரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில், USAID பலவிதமான திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. “தமிழர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது” என்ற பெயரின் கீழ், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு, அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடந்துள்ளன. சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட “ஊடகவியலாளர்கள்” யாரென்பதை இனங்காண்பது மிகவும் எளிது. சி.ஐ.ஏ. இடம் பயிற்சி பெற்ற தமிழ் பேசும் “ஊடகவியலாளர்கள்”, வெளியில் “தமிழ் தேசியம்” பேசினாலும், உள்ளுக்கு அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். வலதுசாரி சிந்தனையுடன் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள். கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, வட கொரியா போன்ற நாடுகளைப் பற்றி, எதிர்மறையான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள்.

இதுபோலவே இவர்கள் வன்னியில் இறுதிப் போர் மூண்டவேளை கூட , முள்ளிவாய்க்கால் வரை சென்று எந்த ஒரு பிரச்சனையும் இன்றி மீண்டும் கொழும்பு திரும்பி தமது நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் தான் , அமெரிக்கா தனது சாட்டலைட்டை முள்ளிவாய்க்கால் பக்கம் திருப்பியது என்றும் கூறப்படுகிறது. ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், Tamil Refugee’s Rehabilitation Organisation (TRRO) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டதால், உடலைத் தூக்கி கழிவுத் தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்று விட்டனர். TRRO தலைவர் கந்தசாமி “கொலை”, அன்று பல வதந்திகளுக்கு காரணமாகி இருந்தது. அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி என்பது பின்னர் அறியப்பட்டது.அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இயங்கிய TRRO அமைப்புகளை புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
முன்னாள் புலிப் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பற்றி, பலருக்குத் தெரியாத உண்மை ஒன்றுள்ளது. 2009, இறுதிப்போரின் பின்னர், சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த புலிப் போராளிகள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டமை அனைவரும் அறிந்ததே. அங்கு முன்னாள் போராளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியும், மொபைல் தொலைபேசிகளை திருத்துவது போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப் பட்டன என்பது தான் நாம் அறிந்த உண்மை. அந்த முகாம்களை யார் நடத்தினார்கள்? யார் நிதி வழங்கினார்கள்? பெரும்பாலான முகாம்கள், சர்வோதயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் நடந்தன. அவர்களுக்கு தேவையான நிதியை USAID வழங்கிக் கொண்டிருந்தது என்பது பலருக்கு தெரியாத உண்மை.

இதனை நிரூபிக்கும் வகையில் , லீக் வயர் என்னும் ஆங்கில இணையம் தற்போது பல செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த உண்மை தெரியாத சில தமிழ் இன உணர்வாளர்கள், சிறிலங்கா படைகள் முன்னாள் புலிப் போராளிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று, அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இதுபோன்ற ஒரு முட்டாள் தனம் வேறு எதுவாக இருக்க முடியும் ? தற்போது கிழக்கில் கூட, அமெரிக்க ஏய் நிறுவனம் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளது. ஓ.டி.ஐ என்னும் இந்த அமைப்பு ஏற்கனவே பல நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பே , நிகரகுவாவில் இருந்த சான்டிஸ்டா கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில், கொன்றாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளது. வெனிசுலா நாட்டில் , சாவேஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக நடந்த சதிப்புரட்சியிலும் ஓ.டி.ஐ சம்பந்தப் பட்டிருந்தது. அண்மையில், கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியமைத்துக் கொடுக்கும் டிவிட்டர் வலைத்தளத்தை உருவாக்கி அம்பலப் பட்டது. 2003 ம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் அக்கரைப்பற்று அலுவலகத்தில், USAID பிரதிநிதிகள், அன்றைய பொறுப்பாளர் கௌசல்யனை சந்தித்துப் பேசி உள்ளனர். அதைத் தவிர, கிளிநொச்சி, திருகோணமலையிலும், USAID, புலிகள் சந்திப்பு நடந்துள்ளது.
இபோது புரியும் இலங்கை விடையத்திலும் அதிலும் குறிப்பாக புலிகள் விடையத்திலும் சி.ஐ.ஏ எவ்வாறு தனது மூக்கை நுளைத்துள்ளது என்று. இதன் பலனையே நாம் 2009ல் அனுபவித்துள்ளோம் என்று கூட கூறலாம்.
New USAID plot against Cuba exposed
THE PLOT TO TEACH MODERN FARMING

Geen opmerkingen:

Een reactie posten