தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juli 2015

வதைபட்ட தமிழர் ஆத்மா சுட்டெரிக்கிறது பார் அங்கே!

பிஜேபியின் தலைமை வேட்பாளராக களமிறங்குகிறார் ராஜீவைத் தாக்கிய கடற்படை சிப்பாய்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:26.39 PM GMT ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) சார்பிலேயே இவர் கம்பகா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதேவேளை, பிஜேபி கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

வதைபட்ட தமிழர் ஆத்மா சுட்டெரிக்கிறது பார் அங்கே!
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:24.05 PM GMT ] [ வலம்புரி ]
தென் பகுதியின் தேர்தல்களம் எப்படி அமையும் என்பது பற்றிய பார்வை தமிழர்களிடம் அதிகமாகச் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததன் பின்னர் தென்பகுதி மீதான பார்வை எங்களிடம் முக்கியத்துவம் பெற்றது என்று கூறலாம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் தேர்தலில் போட்டியிடப்போவதாக மகிந்த தரப்பு போட்ட போலி வேடம் கலைந்து போயிற்று.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­, தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கினாலும் மகிந்த ராஜபக்­ போட்டியிடுவதை பெளத்த தேரர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள், பொது மக்கள் கடுமையாக எதிர்க்கின்றன என்பது தெளிவாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்ச­ போட்டியிடுவதற்கு கட்சியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஒப்பமிட்டுள்ளார் என்றும் ஜனாதிபதி மைத்திரியும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மகிந்த தரப்பு ஒரு பெரும் பிரசாரத்தை செய்தது. எனினும் இப் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியாக இருந்தார்.
ஜனாதிபதியின் மெளனம் எதற்கானது என்று புரியாமல் இருந்தபோது, மகிந்த ராஜபக்­ச தேர்தலில் போட்டியிடுவதற்கு பெளத்த பிக்குகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக சோபித தேரர் கடுமையாக விமர்சிக்க, அவருடன் சேர்ந்து பெளத்த பிக்குகள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதே¼ளை, தென்பகுதி தொழிற்சங்கங்களும் மகிந்த ராஜபக்­ தேர்தலில் போட்டியிடுவதை கடுமையாக கண்டித்ததுடன், முக்கிய அரசியல் தலைவர்கள் மகிந்தவைவையும் அவரோடு சேர்ந்து இருப்பவர்களையும் மிக மோசமாக விமர்சித்தனர்.
இந்த நாட்டில் விடுதலைப்புலிகளைத் தோற் கடித்து பயங்கரவாதத்தை ஒழித்த ஒரு ஜனாதிபதி, பொதுத் தேர்தலில் -சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்குக் கூட முடியாமல் தவிக்கிறார் என்பதை நினைத்த போது,
கடவுள் பற்றிய சிந்தனை எழுந்தது.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்று வள்ளுவன் கூறிய குறள் நிதர்சனம் பற்றி உரைக்கிறது.
ஓ! எமதருமை தமிழ் உறவுகளே! உங்கள் உயிர் வதைபட்டபோது இந்த உலகம் ஊமையாக இருந்தது.
உங்கள் உயிர் வதையில் வெற்றித் திருவிழா கொண்டாடிய பெருமகன் இப்போது பொதுத் தேர்தலில் வேட்பாளராக நிற்க கட்சி இன்றி அலைகிறார்.
அந்தோ புதுமாத்தளனில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளே! உங்கள் புனித ஆத்மாக்கள் பலமானவை.ஜனாதிபதி மைத்திரியின் மெளனத்தில் மகிந்தவுக்கு தென்பகுதியில் எதிர்ப்பு வலுக்கிறது.
புலியை வென்ற மகிந்தவை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று எவரும் கேட்பதாகத் தெரியவில்லை. அட இதைத்தான் ஊழ்வினைப்பயன் என்று உரைப்பரோ! பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழரரின் அழு கண்ணீர் பெரும் படையாய் எழுந்து அழிப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Geen opmerkingen:

Een reactie posten