தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 juli 2015

நல்லிணக்கம் குறித்து வட மாகாண முதல்வருக்கு, அமெரிக்கா அழுத்தம்!



அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் கடுமையான அறிவுறுத்தலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் வலிறுத்தியுள்ளனர்.
வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.
இதன்போது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் வடக்கின் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு விடயத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிஸ்வால், விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வாய்ப்பாக கொள்ளுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கோரப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது முதலமைச்சர் உலக வங்கி பிரதிநிதிகளையும் சந்தித்தார். எனினும் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸனுடன் அவர் மூடிய அறை பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார்.
இதேவேளை தமது பயணம் தனிப்பட்டது என்ற அடிப்படையில் அவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனை சந்திக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten