தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 juli 2015

அருவருடிகளும் நரிகளும் மாவீரர்களின் பெயர்களை உச்சரித்து தங்களது வாக்கு வேட்டைகளை தேடுகின்ற காலம் இது: பொன்காந்தன்



கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 04:01.00 PM GMT ]
கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.
அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டு இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க பொலிஸாருடன் இணைந்து, படையினரும், தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


காந்தியவாதி சசிபெருமாள் திடீர் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 04:24.45 PM GMT ]
இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் திடீரென உயிரிழந்துள்ளார்.
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
பொலிசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயும் தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
இந்த நிலையில், இன்று செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyHQVSVmq5J.html



அருவருடிகளும் நரிகளும் மாவீரர்களின் பெயர்களை உச்சரித்து தங்களது வாக்கு வேட்டைகளை தேடுகின்ற காலம் இது: பொன்காந்தன்
[ வெள்ளிக்கிழமை, 31 யூலை 2015, 04:42.29 PM GMT ]
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு குழப்பத்தில் இருந்தேன். ஈபிடிபியில் சேர்ந்துவிடலாமென நினைத்தேன் என்கிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உபதலைவர் பொன்.காந்தன்.
ஏனென்றால் ஈபிடிபியினர் மாவீரர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். போராளிகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அருவருடிகளும் நரிகளும் மாவீரர்களின் பெயர்களை உச்சரித்து தங்களது வாக்கு வேட்டைகளை தேடுகின்ற காலம் இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHQVSVmq6A.html

Geen opmerkingen:

Een reactie posten