[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 01:38.28 PM GMT ]
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தலில் சிறந்த பதிலை வழங்குவார்கள் என நம்புகிறோம்.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் மத்திய வங்கியின் முறி பத்திர மோசடி உட்பட சகல ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் நாங்கள் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவோம் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்குகிறோம்.
நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் உட்பட பிக்குமாரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான கலைஞர்களும் கடந்த காலத்தில் நல்லாட்சி குறித்து கடுமையாக குரல் எழுப்பி வந்தனர்.
இவர்கள் கூறியது போல் தற்போது இருப்பது மிக சிறந்த ஐக்கிய தேசியக் கட்சி. 5 ஆயிரத்து 400 கோடிக்கும் மேலான மக்கள் பணத்தை கொள்ளையிட்டு, திறைசேரியை சுத்தம் செய்து, அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர் என கோப் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வேட்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்காது என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம்.
அதேபோல், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஜோன் அமரதுங்க, பாலித ரங்கே பண்டார, ரவி கருணாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, சஜித் பிரேமதாச தூய்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காது என எதிர்ப்பார்க்கின்றோம் எனவும் மொஹமட் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகள் அரசியலுக்குள் வருவதை நாம் எதிர்க்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 01:10.06 PM GMT ]
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய தினம் அவருடைய இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மஹிந்த மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஆசனம் வழங்குவது அரசாங்கத்தின் நல்லாட்சி கோஷத்தை கேலிக்கூத்தாக்கும்.
தேர்தலின் பின்னர் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக கருத்துரைத்த அவர், கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியில் பங்காளிகளாக மாறப்போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளது என்றார்.
இதேவேளை தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிப்பது தொடர்பாக நாங்கள் பேசியிருக்கிறோம். இந்நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு ஆகியவை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும்.
முன்னாள் பத்திரிக்கையாளர் தலமையில் சில முன்னாள் போராளிகள் சிலர் சந்திக்க வந்திருந்தனர். எனினும் அவர்கள் தொடர்பில் பல சிக்கல்கள் உள்ளது. போருக்கு பின்னர் முன்னாள் போராளிகள் பல அழுத்தங்களுக்கு உள்ளாவதை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் திடீரென கூடிவிட்டு தமக்கு ஆசனம் கேட்பது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதனைவிட கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் ஆசனங்களை பகிர்ந்துள்ள நிலையில் உடனடியாக சாத்தியமற்றது.
மேலும் நாம் புலம்பெயர் நாடுகள், சிறைகளில், வெளியில் உள்ள போராளிகளுடன் பேசியபோது இவர்கள் தொடர்பான சரியான நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிக்கவில்லை. மேலும் முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வருவதை நாம் எதிர்க்கவில்லை என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten