தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வேட்பு மனு வழங்குமாறு கோரிய திட்டமானது, நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொறுப்பாக செயற்பட்டு வரும் நெடியவனின் திட்டம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 25 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் இலங்கை முகவர் அண்மையில் நோர்வே சென்று நெடியவன் மற்றும் அந்நாட்டின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரை சந்தித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் நெடியவன் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை போட்டியிடச் செய்ய முயற்சித்துள்ளார்.
முன்னாள் புலிப் போராளிகளை போட்டியிடச் செய்தால் அவர்களுக்கான பிரச்சாரச் செலவுகளை பொறுப்பேற்றுக் கொள்வதாக நெடியவன் உறுதியளித்துள்ளார்.
இந்த தகவல்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமைக்கு கிடைத்துள்ளது என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் போராளிகளுக்கு வேட்பு மனு வழங்க முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னாள் போராளிகளுக்கு தமது கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten