தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மற்றும், உறுப்பினர்களின் கருத்துக்கள் இங்கே
திருகோணமலையில் ஒரு ஆசனத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவோம்: இரா.சம்பந்தன்
திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களை கைப்பற்றினால் அதில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்தமைக்கான காரணம் வெறுமனே அமைச்சுப் பதவிகளுக்காகவும் தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்காகவும் அல்ல.
கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் ஸ்திரத்தை உறுதிப்படுத்துவற்காகவே அதனை அந்தக்கட்சியை உருவாக்கினார்.
எனினும் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் வடக்கு கிழக்கில் இல்லாமல் கண்டியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸின் தலைவர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தாலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் புல்மோட்டை முஸ்லிம்கள் உள்ளனர்.
கிண்ணியாவில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் திருகோணமலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும்
இதன்மூலம் ஒரு ஆசனத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கமுடியும் என்று சம்பந்தன் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyHRYSVnw0H.html
Geen opmerkingen:
Een reactie posten