தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 juli 2015

அமெரிக்காவும் இந்தியாவும் எப்படி தமிழர் காதில் பூ சுற்றியது: மீண்டும் நடந்தது என்ன ?

2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் , மகிந்தவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த அமெரிக்கா தீட்டிய திட்டம் சுக்கு நூறாக உடைந்தது. பலமான எதிரி ஒருவரை உருவாக்க அவர்கள் , சரத் பொன்சேகாவை களம் இறக்கினார்கள். ஆனால் அவர்கள் கணக்கு அங்கே தான் பிழைத்துப் போனது. ஆனால் 2015ம் ஆண்டு தேர்தலை மகிந்த அறிவிக்க உள்ளார் என்று சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தெரியும். அவர்கள் அன்றைய தினமே ஈழத் தமிழர்களை வைத்து தீட்டிய திட்டம் இதுதான். மகிந்த ராஜபக்ஷவுக்கு சிங்களப் பகுதிகளில் சப்போட் அதிகம். எனவே தமிழர்கள் பெருவாரியாக வந்து வாக்கு போட்டால் மட்டுமே மகிந்தரை வெளியேற்ற முடியும். இதற்காக அமெரிக்கா தனது பிரச்சார பீரங்கியான பேஸ் புக்கை தாராளமாக பாவித்தது. இது ஒரு வகையில் வட கிழக்கு தமிழர்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஊடகமாக இருந்தது.
அமெரிக்காவும் இந்தியாவும் எதனை நினைத்தார்களோ அது 2015 ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. அதிலும் ஈழத் தமிழர்களே உதவியைப் புரிந்தார்கள். தற்போது மகிந்த சென்றுவிட்டதால் , அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செல்லப் பிள்ளையான ரணில் ஆட்சிக்கு வந்துவிட்டார். இதனால் அமெரிக்கா ஐ.நா மனித உரிமை சபையில் கொண்டு வர இருந்த தீர்மானத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு போர் நடந்ததா ? அப்படியா ? அப்படி என்றால் என்ன என்று ஒன்றுமே தெரியாதது போல கேட்பது போல ஒரு அறிக்கையை தயாரித்துள்ளார்கள் அவர்கள். இதுபோக பல விடையங்கள் அக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் தனது பிராந்திய நலன் தொடர்பாகவே இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறது.
தனக்கு சாதகமான சூழ் நிலை ஏற்பட்டால் அது இந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்று அதிர்வு இணையத்தில் பல முறை எழுதி இருந்தோம். அப்போது எல்லாம் பல புத்தி ஜீவிகள் , தொடர்புகொண்டு அமெரிக்காவை பகைக்க கூடாது என்றும் , அது தமிழர்கள் நலத்தில் அக்கறை கொண்டுள்ள நாடு என்றும் கூறினார்கள். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இருக்கிறது. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால் நிலமை தற்போது தலை கீழாக மாறியுள்ளது. ஐ.நாவில் பெரும் செல்வாக்கு மிக்க நாடாக திகழும் அமெரிக்கா , உண்மையில் இலங்கைப் பிரச்சனையை அடியோடு மூடி மறைக்க ஆரம்பித்துள்ளது. இதனை உலகத் தமிழர்கள் வெறும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சுமந்திரன் , சம்பந்தர் போன்ற அறிவிலிகள் , கண்மூடித்தனமாக அமெரிககவையும் இந்தியாவையும் ஆதரித்து வருகிறார்கள்.
இவர்கள் கூட தமிழர்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகத்தையே செய்து வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/4340.html

Geen opmerkingen:

Een reactie posten