இராணுவ மயமாக்கல்கள் நிறுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ள போதிலும், மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தைப் போன்றே தொடர்ந்தும் இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்வதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
களுகங்கை பிரதேசத்தில் இராணுவத்தினரால் முகாமைத்துவம் செய்யப்படும் லாயா லெசர் ரிசோர்ட் என்னும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கார்பிரேட் தரத்திற்கு குறித்த ஹோட்டல் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக சபையின், பிரதம நிறைவேற்று அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க புனரமைப்பு ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.
இந்த ஹோட்டலின் அனைத்து முக்கிய பொறுப்புக்களும் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிவிலியன் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என அறிவிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் இராணுவத்தினர் பல்வேறு சிவிலியன் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten