தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 juli 2015

மகிந்தவின் வரவால் சிதறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- யானை சின்னத்தில் ஹிருணிகா போட்டி

மைத்திரியிடம் உலங்குவானூர்தியை கோரும் மகிந்த
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 09:39.27 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு விமானப்படையின் உலங்குவானூர்திகளை பெற்று தருமாறு முன்னணியின் தேர்தல் பிரச்சார குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் நேற்று கூடி கலந்துரையாடிய பின்னர், ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் கட்சியினர் பயணம் செய்ய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை வழங்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
அரசாங்கத்தின் அதிகாரம் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருப்பதால், இந்த வசதிகளை பெற ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை தவிர மகிந்த ராஜபக்சவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சுமார் 250 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறும், கொழும்பு மற்றும் குருணாகலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு வீடுகளை வழங்குமாறும், ஏனைய பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கும் வசதிகளும் தேவை எனவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மைத்திரி காட்டிக்கொடுக்கவில்லை– மைத்திரியை பாதுகாக்குமாறு மஹிந்த அறிவுரை
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 09:53.41 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் மக்கள் ஆதரவை காட்டிகொடுத்து விட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவதானம் செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
பெரும்பாண்மை மக்களின் வேண்டுகோளிற்கமைய மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் வேட்புரிமை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதித்தது காட்டிக்கொடுக்கும் செயல் அல்ல என நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் போது ஜனாதிபதிக்காக முன் நிற்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மகிந்தவின் வரவால் சிதறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- யானை சின்னத்தில் ஹிருணிகா போட்டி
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 10:35.53 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் அந்த கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அர்ஜூன ரணதுங்க, ஹிருணிகா பிரேமச்சந்திர, ஏர்ள் குணசேகர, சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க. அத்துருரலியே ரத்ன தேரர் உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறவுள்ளனர்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட பலருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச உட்பட அவரது கோஷ்டியினருக்கு அருவருப்பு இல்லை என்றாலும் அவர்களுடன் இணைந்து போட்டியிட எங்களுக்கு அருவருப்பாக உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, திருடர்கள், ஹெரோயின், எத்தனோல் வியாபாரிகளுக்கு வேட்புமனுவை வழங்கி விட்டது. அந்த முன்னணியில் இணைந்து போட்டியிட எமக்கு அருவருப்பாக உள்ளது.
இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளனர் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
யானை சின்னத்தில் ஹிருணிகா போட்டி: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளதோடு அதற்கான வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டார்.
அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten