தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 juli 2015

ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்ட முடியாது! சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஊடகவியலாளர்களை பிடித்து அறையில் அடைத்து வைத்த மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள்
[ திங்கட்கிழமை, 27 யூலை 2015, 01:30.40 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் யட்டிநுவர தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பான செய்திகளை சேரிக்க சென்ற ஊடகவியலாளர் அங்கு ஏற்றப்பட்டிருந்த மாற்றியமைக்கப்பட்டிருந்த தேசியக் கொடிகளை கண்டு அவற்றை புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஊடகவியலாளர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
ஊடகவியலாளர்களை பிடித்து அவர்களை பாதுகாவலர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று  ஒரு அறையில் இட்டு பூட்டியுள்ளனர். கொடிகள் அகற்றப்படும் வரை ஊடகவியலாளர்கள் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
எடுத்த புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என காவற்துறையினர் என்று கூறிக்கொண்ட சிலர், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
வாள் ஏந்திய சிங்கம் நடுவிலும் அதனை சுற்றி அரச இலைகள் காணப்படும் திரிபுப்படுத்தப்பட்ட தேசியக்கொடி இதற்கு முன்னரும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு எதிரில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது.
தேசியக் கொடியை அவமதித்ததாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பொதுபல சேனா, ரவணா பலய, சிங்கள ராவய ஆகிய அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் இந்த கொடியை பயன்படுத்தியுள்ளன.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது ஊடகப் பிரிவு வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவிர வேறு படங்களையோ காணொளிகளையோ வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு கடும் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டன.
இதனால், பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது, கடத்திச் செல்லப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில், தவறுகளை திருத்திச் கொண்டுள்ளதாகவும் மீண்டும் தவறுகளை செய்ய போவதில்லை என மகிந்த ராஜபக்ச கூறிய போதிலும் இனவாத மற்றும் அடக்குமுறை போன்றவற்றை கைவிடவில்லை என்பதை மேற்படி சம்பவம் உணர்த்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்ட முடியாது! சுரேஸ் பிரேமச்சந்திரன்
[ திங்கட்கிழமை, 27 யூலை 2015, 01:42.59 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் தெற்கில் வெளியாகியுள்ளதுடன், கூட்டமைப்பு மீண்டும் கடும்போக்கை கையாளத் தொடங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
அந்த வகையில், ஒற்றையாட்சிக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாத காரணத்தினாலேயே 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
13வது திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்கள் கடந்த கால அரசாங்கங்களால் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
அதற்கான காரணம் இந்த ஒற்றையாட்சி தத்துவத்திற்குள் ஜனாதிபதி, தான் விம்பினால் நடைமுறைப்படுத்துவார். விரும்பாவிட்டால் அதனைக் கைவிடுவார் என்ற சூழ்நிலை இருக்கின்றது.
இரண்டாவது, ஏற்கனவே 13 வது திருத்தத்தில் இருந்த பல அதிகாரங்கள் எடுக்கப்பட்டு விட்டது.  ஆகவே 1988ம் அண்டு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச்சட்டமல்ல இப்போது இருப்பது.
இந்த நிலையில் ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்ட முடியாது. அதிகாரப் பகிர்வைச் செய்ய முடியாது.
சமஸ்டி அரசிற்குள் இந்தப் பிரசினைகளை தீர்ப்பதற்கு முடியும் அதனையும் அரசாங்கம் ஏற்க மறுத்தால் அல்லது சிங்கள தீவிரவாதிகள் எதிர்ப்பார்களானால், நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு சரியான தீர்வை வழங்க இந்தியாவும் உலக நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
புலிகள் முன்வைத்த கருத்துகளை கூட்டமைப்பு முன் வைக்கவில்லை: 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தென்னிலங்கையில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. விடுதலை புலிகள் முன்வைத்த கருத்துக்களையே கூட்டமைப்பினரும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாகமுன்வைக்கின்றனர் என்றும் எமது இந்த முடிவு பிழையானது இதனை ஏற்க முடியாது என்றம் ஒற்றையாட்சி மூலமே தீர்வு என்றும் கூறுகின்றனர்.
வெளிநாட்டு தூதரகங்களும் என்னிடம் இது தொடரபான விளக்கங்களினை இன்று காலை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளனர்.
இந்த ஒற்றையாட்சி முறைக்கு கீழேயே 13 ஆவது திருத்த சட்டமும் காணப்படுகின்றது எனவே இந்த ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் காணப்படுகின்றது இதனை நாட்டின் ஜனாதிபதி விரும்பினால் நடமுறைபடுத்தலாம் அல்லது அதனை வெளியில் எடுக்கலாம்.
ஆகவே சுயாட்சியினை தருவதற்கு முன்னைய அரசும் முன்வரவில்லை இந்த அரசும் சுயாட்சியினை தர மறுக்கம் பட்சத்தில் இதனை எமக்கு பெற்றுத் தர இந்தியாவும் ஏனைய சர்வதேச சமூகங்களும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
எனவே தேர்தல் விஞ்ஞாபனமும் தமிழ் மக்களின் இறமை, சுயநிர்ணய அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் கேட்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வு.
ஐ.நா அறிக்கை வெளிவந்த பின்பு அதில் கூறப்படும் விடயங்களுக்கு பதில் கூறப்படும் என்றும் ஒரு உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கபடும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு உண்டு. இந்த வகையில் ஐ.நா அறிக்கை குறித்த தினத்தில் வெளியிடப்படவேண்டும் அதில் குறிப்பிடப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள்
மேற்கோள்ளபடவேண்டும். இதற்கு ஐ.நா மற்றும் சர்வதேச சமூகங்கள் செயற்படவேண்டும்.
உள்ளக விசாரணை என்பதை நாம் ஏற்றுகொள்ள போவதில்லை. ஆகவே தமிழர் எதிர் கொண்ட பல பிரச்சினைகளை உள்ளக்கிடக்கையை இந்த ஐ.நாஅறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே இதில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறன விடயங்களில் நாம் உறுதியாக நிற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் இதனை உணர்ந்து மக்கள் செயற்படவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyHRbSVnx7F.html

Geen opmerkingen:

Een reactie posten