தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

புலிக் கொடி போல தனி சிங்களக் கொடி ஏற்றப்படுகிறது ராஜபக்ஷ கூட்டங்களில் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்ற கூட்டத்தில் சிங்கள கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வகை கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. நாட்டின் சிறுபான்மை இன சமூகங்களை குறிக்கும் வர்ணங்கள் இன்றி சிங்கள பெரும்பான்மை சமூகத்தை மட்டும் குறிக்கும் வகையில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
யட்டிநுவர பிரதேசத்தில் இவ்வாறான கொடிகள் ஏற்றப்பட்டிருந்தது. எனினும், இந்த கொடிகள் ஏற்றப்பட்டமை குறித்த புகைப்படங்களை எடுத்த ஊடகவியலாளரை மஹிந்தவின் பாதுகாவலர்கள் தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது இந்த படங்களை போட வேண்டாம் என குறித்த பாதுகாவலர்கள், ஊடகவியலாளரிடம் கோரியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை மஹிந்த பார்த்தால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் இதனால் புகைப்படங்களை பிரசூரிக்க வேண்டாம் எனவும் கோரியுள்ளனர்.
கொடி ஏற்றப்படுவதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறியாது இவ்வாறு ஏற்பாட்டாளர்கள் கொடியை ஏற்றியுள்ளதாக ஜனாதிபதியின் பாதுகாவலர்கள், ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளனர். கொடிகள் அகற்றப்பட்டதன் பின்னர், ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten