தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juli 2015

த.வி.கூட்டணியில் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தயார்: வீ.ஆனந்தசங்கரி

மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவதா? இல்லையா? முடிவு இல்லை!
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 11:49.50 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழக்கும் அறிகுறி தென்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்த சில நாட்களில் ஏனைய கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடி முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனுவை வழங்குவது குறித்து தீர்மானிக்க உள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஐ.ம.சு. முன்னணியின் இறுதி வேட்பாளர் பட்டியலை ஆராயும் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 12:12.00 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து இந்த கட்சிகளின் இறுதி வேட்புமனு குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளது.
இதனடிப்படையில் இன்று இரவு இந்த கலந்துரையாடல் நடைபெறும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி வேட்புமனு குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 6 பேர் அங்கம் வகிக்கி்ன்றனர்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன. எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இறுதி வேட்புமனு குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று இரவு நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வேட்பாளர் பட்டியல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை கூடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
சகல மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ள வேட்பாளர் பட்டியல் குறித்து இதன் போது மீளாய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட எவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவதில்லை என்ற இணக்கப்பாட்டுக்கு சகலரும் வந்துள்ளதாக தெரியவருகிறது.

த.வி.கூட்டணியில் முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தயார்: வீ.ஆனந்தசங்கரி
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 12:55.29 PM GMT ]
முன்னாள் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். எனினும் அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள், அவர்களே தேசிய தலைவர்கள் என்று அவர்களது பெயரைக் கூறியே வளர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அவர்களுக்கு அரசியல் சந்தர்ப்பம் வழங்க மறுத்துள்ளமை தவறான விடயம்.
நேர்மையான, விசுவாசமான, தமிழர்களின் இனப்பிரச்சினை பற்றி நன்கு விளங்கியவர்களே நாடாளுமன்றம் செல்லவேண்டும். அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும்.
மேலும், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தோற்கடித்து முன்னாள் போராளிகள் நாடாளுமன்றம் செல்வதற்கு வழிவகுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விரும்பினால், அவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTbSUeu5I.html

Geen opmerkingen:

Een reactie posten