தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 juli 2015

மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ள குமார் குணரத்னம்

சுதந்திரக் கட்சி கூட்டமைப்பை விட்டு விலகாது!– ராஜித
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:20.32 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை விட்டு விலகாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை விட்டு வில தனித்து போட்டியிட எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த கட்சியின் உறுப்பினர்கள், தனித்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி பீதி ஏற்பட்டவர்கள் மஹிந்தவிற்கு எதிரான புரளியை கிளப்புகின்றனர்!- மனுஷ
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 12:31.37 AM GMT ]
எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் தோல்வியைத் தழுவி விடுவோம் என்ற பீதி ஏற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கப்படாது என புரளியை கிளப்பி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிட்டும்.
இந்த வெற்றிக்கு அஞ்சியவர்கள் தேவையற்ற பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையைக் கண்டு, அரசியல் எதிரிகள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் சூழ்ச்சிப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக மனுஷ நாணயக்கார சிங்களப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ள குமார் குணரத்னம்
[ புதன்கிழமை, 08 யூலை 2015, 03:25.03 AM GMT ]
தேர்தல் வியாபாரங்களில் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் ஈடுபடுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து வெளியேறுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும் குமார் குணரத்னம் இதுவரையில் அவுஸ்திரேலியா நோக்கிய செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் அவர் மீண்டும் பிரபலமாக அரசியலில் இணைத்துக்கொள்வதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முயற்சிப்பதாக தெரியவந்துள்ளதொடு, தற்போதைய தேர்தல் பரபரப்பேற்பட்டுள்ளதனால் குமார் குணரத்னம் இலங்கையில் இருப்பதற்கு அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குமார் குணரத்னத்தை தேர்தல் வியாபாரத்திற்கு இணைத்து கொள்வதற்கான எதிர்பார்ப்புள்ளதாகவும், இது தொடர்பிலான தரப்பினரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்து்ளார்.
குமார் குணரத்னம் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அனுமதி கிடைக்க வேண்டுமாயின் முதலில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கேட்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு இல்லையேல் தனியாக தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை என பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTcSUevyJ.html

Geen opmerkingen:

Een reactie posten