தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 juli 2015

மலேசியா, சிங்கப்பூரில் பரப்படைந்துள்ள கையெழுத்து இயக்கம்: நடிகர் சிம்புவும் இணைந்தார்

ஐ.தே.கவில் இணைவாரா எஸ்.எஸ்.பீ.திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 11:11.59 AM GMT ]
தான்  ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையல்ல என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளேன்.
அதற்கமைய கண்டி மாவட்ட தலைவராக எதிர்வரும் பொது தேர்தலில் கூட்டணியில் செயற்படும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.


மலேசியா, சிங்கப்பூரில் பரப்படைந்துள்ள கையெழுத்து இயக்கம்: நடிகர் சிம்புவும் இணைந்தார்
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 08:13.34 AM GMT ]
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் மலேசியா, சிங்கப்பூரிலும் பரப்பரப்படைந்துள்ளதோடு, தமிழக திரைநட்சத்திரம் நடிகர் சிம்புவும் இதில் தன்னை இணைத்துள்ளார்.
இணையவழி மூலமும் நேரடிப்படிவங்கள் ஊடாகவும் உலக தமிழர் பரப்பெங்கும் முனைப்பு பெற்றுள்ள இக்கையெழுத்து இயக்கம் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் சூடுபிடித்துள்ளது. 
தமிழர் இளைஞர் ஒன்றியத்தின் சிங்கப்பூர் பிரதிநிதிகள் அங்கு நேரடி ஒப்பங்களை பெற்றுள்ளதோடு, இணையமூலமும் மின்னொப்பங்களை இட்டு வருகின்றனர்.
இதேவேளை நாம் தமிழர் கட்சியின் மலேசிய மையம் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மலேசியாவின் பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் இவ்விடயம் முக்கிய செய்தியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பிரபல திரை பிரமுகர்கள் இக்கையெழுத்து போராட்டத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிராகாஸ்குமார் ஆகியோர் தங்கள் ருவிற்றர் மூலம் இக்கையெழுத்து இயக்கத்தில் இணைந்துள்ளதோடு அறைகூவலும் விடுத்துள்ளனர்.
பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து இயகத்தின் செயற்பாடு www.tgte-icc.org எனும் இணைய மூலமாகவும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten