ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார். (அதாவது உண்மையான போராளிகள் , முள்ளிவாய்க்காலிலேயே சயனைட் அடித்து இறந்துவிட்டதாக இவர் முன்னர் தெரிவித்திருந்தார்) அது பொய்யாம்.
இந்த வாகன கையளிப்பு தொடர்பாக நாம் முதன் முதலில் 21.06.2015 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் இச்செய்தியை எந்த ஒரு தமிழ் ஊடகங்களும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/4091.html
Geen opmerkingen:
Een reactie posten