பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் வழக்கம் போல பரபாகரனை அரசியல்வாதிகள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று மருதனார்மடத்தில் நடந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பிரபாகரனை பலரும் மலிவு விலையில் விற்றதை அவதானிக்க முடிந்தது. வழக்கம் போல பிரபாகரனின் பெயரைக் கேட்டதும் மக்கள் ஆர்ப்பரித்து வானதிர கரகோசம் செய்தனர்.
மருதனார்மடத்தில் நேற்று முன் தினம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்திற்கு வலி.தெற்கு பிரதேசசபை தவிசாளர் தி.பிரகாஷ் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், ‘தேசியத்தலைவர் காட்டிய வழியில் கூட்டமைப்பு பயணிக்கும்’ என்றார். இதனைக் கேட்ட மக்கள் வானதிர கரகோசமிட்டனர். பின்னர் உரையாற்றிய சிறிதரன் வழக்கம் போல பிரபாகரன், மாவீரர் என கூறி, தன் பங்கிற்கும் மக்களை கரகோசமிடச் செய்தார்.
ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பிரபாகரன் காட்டிய வழியில் பயணிக்கிறோம் என கூறி வாக்கு கேட்பதும், பின்னர் வழக்கமான அரசியலை செய்வதையுமே தமிழ் அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten