தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கிறார் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனைவரும் மாற்றம் தேவை என்பர். நாம் கேட்கும் மாற்றம் வித்தியாசமானது. ஆனால் நாம் கேட்கும் மாற்றம் எங்களைப் போன்ற சாதாரண அரசியல் பின்புலம் இல்லாத கறைபடியாத கைகளுடன் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சமுதாயத்தினருடன் எமது மக்களையும், பிரதேசத்தையும் முன்னுக்கு கொண்டு வருவதே நாம் கேட்கும் மாற்றம்.
நாம் இம்முறை தகுதி, உரிமையோடும் வந்துள்ளோம். 2010 நாடாளுமன்ற தேர்தல் கேட்கும் போது தனியொருவனான வந்தேன். தற்போது இளம்படையுடன் இறங்கியுள்ளேன்.
மக்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். 2015 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழ் மக்களிடம் பெற்ற மாபெரும் அமோக ஆதரவும், வெற்றியும் இன்றும் நிலைத்திருக்க வேண்டுமானால் ஜனாதிபதியின் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக ஜனாதிபதி மக்களுக்கு நல்ல சேவையினை வழங்கவுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நனவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் கொடுத்த ஆதரவு நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வழங்கினால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி இதுவரை காலமும் முகவர் வைத்து அரசியல் செய்பவர்கள் போய்விட்டனர்.
எனவே நேரடியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை என்கிறார் ஜனாதிபதி மைத்திரி. இதேவேளை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருக்கு வழங்குங்கள் என தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் 11 அரசியல் கட்சிகளும், 9 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten