தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 juli 2015

தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்துள்ளார்கள்: ஐ.ம.சு.கூ வேட்பாளர் கி.சிவநேசன்



இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களை வழிநடத்திய தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதனைப்பெற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதை தமிழ் மக்கள் சிந்தித்துபார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி வேட்பாளரான கிருஸ்ணபிள்ளை சிவநேசன்(வெள்ளையன்)தெரிவித்தார்.
நேற்று மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல இன்னல்களையும் அழிவுகளையும் சந்தித்த மக்கள் அவர்களின் முன்னேற்றம், அவர்களின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
போராட்டங்கள் மூலமும் உணர்ச்சி பேச்சுகள் மூலமும் எமது சமூகத்தினை முன்னேற்றமுடியாது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். தமிழ் தேசியத்தின்பால் நாங்கள் கொண்ட பற்று மூலம் எதனையும் நாங்கள் சாதித்துவிடவில்லை. மாறாக எமது மக்கள் பின்தங்கிய நிலைக்கே சென்றுகொண்டுள்ளனர்.
நாங்கள் இன்று நடுக்கடலில் விடப்பட்ட நிலையில் உள்ளோம். எங்களுக்கு துரும்புச்சீட்டாக இருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பாகும். அவற்றினை நாங்கள் பற்றிச்செல்வதன் மூலமே எமது சமூகத்தினை முன்னேற்றத்திற்கு கொண்டுவரமுடியும்.
கடந்த காலத்தில் இந்த நாட்டில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இருந்துவருகின்றது. அந்த ஆட்சிக்காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்தியை கண்டது. மண்முனைப்பாலம் கூட கட்டப்பட்டது.
இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவராகவும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த நாட்டையும் மட்டக்களப்பு மாவட்டத்தினையும் கட்டியெழுப்பமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten