தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

யாழில் தமிழ் கட்சிகள் பெரும் குழப்பத்தில்: ஆனால் மைத்திரி யாழ் விஜயம் !

யாழில் தமிழ் தேசிய கட்சிகள் பல குழப்பத்தில் உள்ள நிலையில் , இன்றைய தினம் மைத்திரி அதிரடியாக யாழ் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புறம், தமிழ் தேசியத்திற்காக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயகப் போராளிகள் என்று பல கட்சிகள் இம் முறை தேர்தல் களத்தில் குதித்து பெரும் குழப்பகரமான நிலையை தோற்றுவித்துள்ளது. அதுபோக சில பிரபலங்களும் , சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்கள். இன் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக யாழில் போட்டியிடும் அங்கஜனை ஆதாரிக்க , மைத்திரி யாழ் சென்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் யாழில் உள்ள நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு. பின்னர் அங்கஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே அவர் காணமல் போனவர்களின் உறவினர்களை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களையும் அங்கே சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டு அறிந்துள்ளார். மக்கள் வெள்ளம் அலைமோதியுள்ளது என்கிறார்கள். தமிழர்கள் பல கட்சியாக பிரிந்து பிணக்கில் இருக்க , அதற்குள் தமது கட்சிக்கான அறுவடையை செய்துகொண்டு மைத்திரி மீண்டும் கொழும்பு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten