செப்ரெம்பர் வரை நீடித்துள்ள ஈழத்தமிழர்களின் நீதிக்கான வேட்கையின் மில்லியன் கையெழுத்து இயக்கத்தில், கனேடிய அரசியற் பிரமுகரான திரு. பற்றிக் பிறவுண் அவர்கள் இணைந்துள்ளதோடு, ஒப்பமிடுமாறு அனைவரையும் ஒப்பமிடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் யூலை15ல் பத்து இலட்சத்தினைக் எட்டியிருந்ததோடு, செப்ரெம்பர் வரை இவ்வியக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனேடிய ஒன்ராறியோ மாநிலத்திற்கான கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவரும், கனேடிய பாராளுமன்ற (ஒன்பது ஆண்டுகள்) உறுப்பினருமாகிய திரு.பற்றிக் பிரவுண் அவர்கள், இக்கையெழுத்து இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளதோடு அனைவரையும் ஒப்பமிடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என கனேடியப் பாராளுமன்றத்தில் கடந்த மே மாதம், உரையாற்றியிருந்த திரு.பற்றிக் பிரவுண் அவர்கள், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மோசமான மனித உரிமைகள் விவகாரத்தில் நம்பிக்கையான முன்னேற்றம் எதனையும் அடையவில்லை எனவும் தெரிவித்திருந்;தார்.
கனேடிய அரசியற் தளத்தில் முக்கிய சக்தியாக மாறிவரும் திரு.பற்றிக் பிரவுண் அவர்களது ஈழத்தமிழர்களின் நீதிக்கான தோழமையும், தமிழினப்படுகொலை விவகாரத்தினை ஓர் இனப்படுகொலை எனும் கோணத்தில் கையாள்வதும், பரீகார நீதிக்கான எமது போராட்டத்துக்கு எதிர்காலத்தில் உறுதுணையாக அமையுமெனம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ICC_Patrick Brown
ICC_Patrick Brown1Ptrickk Brown Twitter