தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 juli 2015

தமிழர்களின் ஜனநாயகப் பலத்தை சிதறடிக்கும் முகவர்கள் குறித்து சுமந்திரன் எச்சரிக்கை

தமிழர்களின் ஒற்றுமை சர்வதேச ரீதியில் பெற்றுவரும் அங்கீகாரத்தை முறியடிக்கும் முயற்சிக்கு துணை போயுள்ள முகவர்கள் பல்வேறு திட்டங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் இளம் உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பொன்றில், யாழ் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த மாகாண சபைத்தேர்தல், இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததன் மூலம் ஜனநாயக பலத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.
இதனை சிதறடிக்கும் நோக்கில் தேசியம், அபிவிருத்தி, சலுகை போன்ற கோஷங்களுடன் முகவர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து உரிய விழிப்புணர்வை மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வழங்க வேண்டியது இளம் மாகாண சபை உறுப்பினர்களின் பொறுப்பாகும் என  அவர் மேலும் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten