பெருந்தோட்ட மக்களின் சரித்திரம் இந்நாட்டில் 200 ஆண்டுகளைக் கடந்துள்ள போதும், அவர்களின் 90 வீதமான மக்கள் இன்னும் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற தொழில்களையே தங்களின் நாளாந்த உணவு தேவைகளுக்காக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மனிதர்களாகவிருந்தபோதும் ஏனைய சமூகங்கள் தங்களின் சொகுசான தேவைகளுக்கும், அரசியல் நோக்கங்களுக்கும் பயன்படுத்தும் மூலக்கருவியாக இன்றும் இருப்பது இந்நாட்டிலேயே வேதனைக்குரியதாகும்.
இவர்களின் பிள்ளைகளை இன்றும் நகர்வாழ் மக்கள் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துவதும் ஓர் சர்வ சாதாரணமான விடயம். இதற்கு முக்கிய காரணம் வறுமை என்னும் தொற்று நோய்.
கொழும்பு மாநகரில் வாழும் செல்வந்தர்களின் வீட்டை அழகுபடுத்தும் இம்மக்களின் இளம் சமுதாயத்தினருடன் முதியோர்களும் இருக்கின்றார்கள் என்பது உண்மை.
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் இ.தோ.கா தலைமைகளுக்கு அரசியல் ரீதியான ஆதரவை ஆர்வமாக இம்மக்கள் அளித்ததன் பின், காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாகவும் ஐ.தே.க அரசில் அமைச்சராகவும் பதவியேற்றார்.
இவரின் அரசியல் பிரவேசத்திற்கு அன்று முக்கிய காரணமாக இருந்தது. அன்றைய ஸ்ரீ.ல.சு.க பெருந்தோட்ட பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணியை சுவீகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்க பகிரங்கமாக அறிவித்தது.
அதன் பிரதிபலனாக பெருந்தோட்ட மக்கள் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அதற்கு போராட்டத்தில் சிவனு லெட்சுமனன் என்ற இளைஞன் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்.
அந்த சம்பவம் மலையக மக்களின் எதிர்ப்பை காலம் சென்ற தொண்டமானுக்கு அரசியல் பிரவேசத்திற்கு உந்து சக்தியானது எனலாம். எனினும் மூன்றாவது நாடாளுமன்ற பிரதிநிதியாகவே அன்று அவர் தெரிவு செய்யப்பட்டார்.
அன்றைய காலம் தொட்டு 2015 ஆம் ஆண்ட வரையில் இ.தொ.கா தலைவர்கள் அரசாங்கம் மாறினாலும் அமைச்சரவையில் 2015 ஜனவரி 7ஆம் திகதிவரை இருந்து வந்துள்ளார்கள்.
காலம் சென்ற தொண்டமான் அவர்கள் ஒரே ஒரு முறை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாராதுங்க காலத்தில் தோல்வியை தழுவியதால், சந்திரிக்காவின் ஆட்சியில் காலம் சென்ற சந்திரசேகரன் அவர்கள் அமைச்சரானார்.
எனினும் சுமார் 30 நாட்களுக்குள் சந்திரிக்கா அம்மையாருடன் தொண்டமான் பேரம் பேசி மீண்டும் அமைச்சரவையில் முக்கிய அமைச்சரானார். அதன் பின் அவர் காலத்திற்கும் பின்னும் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவே இருந்துள்ளார் என்பது கடந்த கால நிகழ்வுகளாகும்.
இந்த காலப்பகுதியில் தொழிற்சங்க செயற்பாடுகள் அரசியல் சார்பாகவே நடைப்பெற்ற காரணத்தினாலும் தோட்ட தலைவர்களை, தவிர்த்து உதவி செயலாளர்கள், உப தலைவர்கள் என்ற பதவி நிலையில் வியாபாரிகளும் நகர்வாழ் மக்களையும் தொழிற் சங்க பதவியில் நியமிக்கப்பட்டார்கள்.
இது இ.தோ.காவின் தொழிற்சங்க செயற்பாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வீழ்ச்சிக்கு வித்திட்டது. இந்நிலையில் தொழிலாளர்களிடையே தொழிற்சங்க கட்டுபாடுகள் நம்பிக்கைகள் இந்த சங்கத்தில் சிதறடிக்க ஆரம்பித்து விட்டது.
தொழிற்சங்க ரீதியாக தீர்க்கப்பட வேணடிய பிரச்சினைகளை எல்லாம் அமைச்சர்களும் மாகாண உறுப்பினர்களும் அதிகார பலத்தின் மூலம் தீர்க்க முற்பட ஆரம்பித்தனர்.
இது தோட்ட நிர்வாகங்களுக்கு மிகவும் சாதகமான நிலையை தோற்றுவித்து விட்டது. எப்படி என்றால் தோட்ட பகுதியை அண்டிய நகரங்களிலேயே தோட்ட நிர்வாகங்களுக்கு தேவையான உபகரணங்களை, கட்டிடப் பொருட்கள் மற்றும் காரியாலய உபகரணங்கள் மொத்தமாகவும் அதிக விலைகளிலும் வாங்கப்படுவது வழக்கம்.( இதில் தோட்ட பண்டகசாலை, உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பலருக்கும் கொமிசன் வழங்கப்படுவது வழமை)இது தற்போதும் நடைமுறையில் உள்ளது.)
இந்த உப காரணங்களை வழங்கும் வியாபாரிகளே இ.தோ.காவின் முக்கிய பதவிகளில் உள்நுழைந்தப்படியால் தோட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் சாதகமான நிலையும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பாதகமான சூழ்நிலையும் உருவானது.
இது முழுமையாக பலமான நிலையில் பேரம் பேசக்கூடிய வகையில் இருந்த இ.தோ.காவின் பலவீனப்படுத்தியதோடு, சாதாரண பிரச்சினைகளாக இருந்தாலும் அதுவும் கூட அரசியல் வாதிகளின் தலையீட்டிலேயே தீர்வு காணும் சூழ்நிலையை உருவாக்கியது.
தொழிற் சங்கத்திற்கு மக்கள் அங்கத்துவ பணத்தை செலுத்தினாலும் இது அரசியல் காரியாலயமாக செயற்பட்டது. தொழிற் சங்க நடவடிக்கை ஏனோ தானோ என்ற நிலையை உருவாக்கியது.
சகல காரியாலய உத்தியோகஸ்தர்கள், அந்த பகுதி அரசியல் உத்தியோகஸ்தர்கள் பதவிகளை வகித்த வியாபாரிகளின் கட்டளைக்குள் செயற்பட வேண்டியதாயிற்று.
தோட்டங்களிலும் தலைவர்களாக செயற்பட்டவர்கள் அரசியல் பதவிக்கும் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அரசால் வழங்கப்படும் அபிவிருத்தி நிதியில் எவ்வாறு தாங்கள் பலனை பெறலாம் என்ற சிந்தனையை வளர்த்தது.
இது தோட்ட நிர்வாகங்களுக்கு மிகவும் சாதகமாகிவிட்டது. அதே நேரம் மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறையை காட்ட தொடங்கிவிட்டார்கள்.
இந்த மாற்றம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை இளம் சமுதாயத்தையும் மாற்றிவிட்டது. இதுவும் இ.தொ.கா பலத்தை சிறிது சிறிதாக குறையக்கூடிய அல்லது நம்பிக்கை தளவிற்கு காரணமாயிற்று என கருதலாம்.
இதை கடந்த காலமென்றாலும் கடந்தவை சரித்திரம் அது படிப்பிற்கு பாடமே எதிர்காலத்தை திட்டமிடவும் உதவும். எனவே நாம் இப்பொழுது தற்போதைய மலையக தொழிற் சங்க அரசியல் நிலையை பார்ப்போம்.
தொழிற் சங்கமொன்று ஜனநாயக ரீதியாக செயற்பட வேண்டுமானால், அது முதலில் அதன் அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமாகவும், நியாயமாகவும் ஆராய்ந்து அதன் முடிவை அங்கத்தவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இது வெளிப்படையாக இருப்பது அவசியம்.
காரணம் தொழிற்சங்கத்திற்கு அதன் அங்கத்தவர்களே முதலாளி, அங்கு அவர்களுக்காக சேவையாற்று பதவி நிலை சேவையாளர்களே இந்த தலைமை முதல் உத்தியோகஸ்தர்கள் வரை அந்த அங்கத்துவ பணம் கொடுக்கும் அங்கத்தவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க இவர்கள் கடமைப்பட்டவர்கள்.
அங்கத்தவர்களின் அதிகரிப்பு, சங்க நிதிவளம் என்பவற்றிலேயே சங்கத்தின் பலம் உள்ளது. அங்கத்தவர்களின் பொருளாதாரம், தொழில், வருமானம் என்பன மிக முக்கியம் என்பதை தொழிற் சங்க நிர்வாகிகள் உணர்ந்து செயற்படல் அவசியம்.
குறிப்பாக அங்கத்தவர்களின் வருமானம் சீர்குலையாது அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க, அந்த அங்கத்தவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியமாகும். போராட்டம் நடத்த வேண்டுமானால், சூழ்நிலை காலநிலை சந்தர்ப்பம், கால அவகாசம், தயார் படுத்திய திட்டமிடல் , செயற்படுத்தல் என்பது மிக அவசியம்.
இந்த சம்பள உயர்வு போராட்டத்தை அறிவிக்கும் முன் இ.தொ.கா நாம் மேற்குறிப்பிட்ட விடயங்களை ஆராய்ந்து பார்த்ததா என்பது கேள்விக்குரியது.
ஆயிரம் ரூபாய் என்ற கோரிக்கையை முன் வைத்த இ.தொ.கா ஏதோ ஓர் சூழ்நிலையில் யோசிக்காது கூறிவிட்டதா, அல்லது ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்வு கோரிக்கை நியாயபூர்வமான விளக்கத்தை தோட்ட கம்பனிகளுக்கு கோரிக்கையாக வைப்பதற்கு முன் சங்க முதலாளிகளான அதன் அங்கத்தவர்களிடம் கலந்து பேசி அவர்களின் சம்பந்தத்துடன் வைத்ததா என்பதும் கேள்விகுறியே?
இ.தொ.க தலைவர் எம்..சிவலிங்கம் அனுபவம் வாய்ந்த தொழிற்சங்கவாதி. அவருக்கு தொழிற் சங்கத்தை எவ்வாறு நடாத்தி செல்ல வேண்டும் என்ற அனுபவம் உள்ளவர். அப்படி இருந்தும் உண்மையில் நடந்தது என்ன?
இங்கே தான் பல விடயங்களை மக்களின் நலனுக்காக நாம் தெரிவிக்கின்றோம். இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல, அவர்களின் பிள்ளைகள் உயர் கல்விக்காக கடந்த 12 வருடங்களாக பல இன்னல்கள் மத்தியில் கல்வி பயின்று வருகின்றனர்.
அடுத்த ஆகஸ்ட் மாதம் க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தங்களை தயார்படுத்த வேண்டிய இந்தகால சூழ்நிலையில் அவர்களின் பெற்றோர்கள் சம்பள உயர்வு போராட்டம் என்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வேளையில் அவர்கள் வசிக்கும் இல்லங்களில் இருந்து கல்வி கற்பதற்கு எவ்வாறு கவனத்தை செலுத்த முடியும்?
உயர்கல்வி சித்தியடைந்தால், ஓர் சிறுவன் இளைஞராக மாறும் நிலையை ஆங்கிலத்தில் young என்பார்கள். இந்த ஆங்கில y எழுத்து இளைஞர்களின் வாழ்வில் மிக முக்கிய இடத்தில் உள்ளது.
ஒரே வகையில் வளர்ந்த அவர்கள் Y என்ற எழுத்தின் பிரிவு ஆரம்பிக்கும் இடமே க.பொ.த உயர்தர பரீட்சை.
கல்வியில் கவனம் செலுத்தி y பிரியும் இடமே உயர்கல்வியா? அல்லது தொழிலா? என்று தீர்மானிக்கும் கட்டம்.
கல்வியில் மிகவும் பின்னடைவை எதிர்நோக்கிய இந்த மலையக மக்களின் பிள்ளைகள் உயர்கல்விக்கா அல்லது தொழிலுக்கா என்ற நிலைக்கு வரும் மாதமே ஆகஸ்ட் மாதம்.
ஆகவே இந்த தோட்ட மக்களின் பிள்ளைகள் அமைதியாகவும், ஆர்வத்துடனும் நிம்மதியாகவும் மிகவும் அவதானத்துடனமும் தங்களின் கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டிய இந்த நிலையில் இ.தொ.கா இந்த மாணவர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கவா இந்த திடீர் போராட்டம்?.
நாம் சம்பள உயர்விற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் அவைகளை கேட்டு போராட தீர்மானிக்கப்பட்ட சூழ்நிலைமையே கடுமையாக எதிர்க்கின்றோம்.
1992ம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தத்தை ஒரே முகமாக கைச்சாத்திட்ட ஆறுமுகனும், வேலாயுதமும் இன்று இருமுகத்தை காட்டுவது ஏன்?
இந்த சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்த காலம் மார்ச் 31ல் முடிவடைந்தும் 03 மாதம் பொறுத்த நீங்கள், இந்த உயர்தர பரீட்சை தேர்தல் என்று வரும்போது உங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக இந்த அப்பாவி மக்களின் வாழ்க்கையை மாற்றிவிட வேண்டாம்.
நீங்கள் சேவை செய்தவர்கள் தானே உங்களின் சேவையை முன்வைத்து தேர்ததலை சந்தியுங்கள்.
நீங்கள் கூறியபடி உங்களின் கோரிக்கைக்கு கட்டுப்பட்டு 1977 முதல் 2014 வரை தேர்தலில் வாக்களித்தவர்கள் தானே இந்த மலையக தோட்ட தொழிலாளர்கள்.
2015 ஜனவரி மாதமே நீங்கள் கோரியபடி உங்களுக்கு வேண்டிய மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்குகளை அளிக்காது, தன்னிச்சையாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தார்கள் என்ற காரணத்தினால்,
அவர்களை பழிவாங்குவதற்காக அவர்களின் பிள்ளைகளின் கல்வி, எதிர்காலத்தை சூன்யமாக்க இந்த முறையற்ற போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று நாம் கருதுகின்றோம்.
உயர்தர பரீட்சைக்கு பின் போராடுங்களே இந்த மாணவர்களின் ஆசியும் உங்கள் போராட்டத்திற்கு உதவும்.
தமிழர்களின் பிரச்சினைகள் புரையோடிபோய்யுள்ள இந்த நேரத்தில் எதிர்காலத்தில் சில ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தற்போது சூழ்நிலை சாதகமாகி வருவதாக தமிழ் உள்ளங்கள் நினைக்கும் இவ்வேளையில்,
மகிந்த மீள் நுழைவு மலையகத்தில் அமைதியின்மை போன்ற நிலை உருவாகியுள்ளமை நீங்கள் மகிந்தவிற்கு மறைமுகமாக உதவ போட்ட சூழ்ச்சியாக ஏன் கருதக்கூடாது?
இந்த போராட்ட சூழ்நிலையில் மலையக தோட்ட பகுதி மாணவ மாணவிகளே பாதிக்கப்படபோகின்றார்கள். அரசியல் தலைவர்களின் பிள்ளைகளோ அல்லது அவர்களுக்கு வால் பிடிக்கும் உங்கள் விசுவாச நகரவாசிகளின் பிள்ளைகளோ பாதிக்கப்பட போவதில்லை.
அடுத்த மாதம் போதிய வேதனம் இன்றி பொருளாதார சிக்கலில் க.பொ.உ பரீட்சைக்கு செல்லும் தோட்ட மக்களின் பிள்ளைகளுக்கு வேண்டிய கற்றல் உபகரணங்கள், போக்குவரத்து செலவுகளை ஈடு செய்ய முடியாது. இந்த மக்கள் சிலவேளை உயர்தர பரீட்சை எழுத தம் பிள்ளைகளை அனுப்ப முடியாத பொருளாதார சிக்கல்கள் உருவாகலாம்.
அதன் மூலம் இம்மாணவ மாணவிகளின் எதிர்காலம் சூன்யமாக்கப்படலாம். ஆனால் உங்களுக்கு தேவை அம்மக்களின் வாக்குகள் மாத்திரமே. அதன் மூலம் நீங்கள் சுகபோகத்தை தொடர்ந்தும் அனுபவிக்கலாம் என்ற எண்ணமா?
அல்லது ஜனாதிபதி தேர்தலில் உங்கள் கோரிக்கையை புறந்தள்ளிய காரணத்திற்காக அவர்களின் பிள்ளைகளின் கல்வியை நாசமாக்கும் திட்டமா?
ஆறுமுகத்தை நீங்கள் இப்படியே மக்களுக்கு காட்டுகின்றீர்கள் என நாம் எண்ணுகின்றோம். அரசியல் ஆதாயத்திற்காக இந்த திடீர் வேதன உயர் போராட்டம் தேர்தல் குண்டாகவும், மஹிந்த மீள்வரவுள்ளதற்கான உபகாரமாக மகிந்தவிற்கு நீங்கள் கொடுக்கும் பரிசா?.
ஆறுமுகத்தின் ஆறு முகங்கள்
ஒரு முகம் - அமைச்சராக வாழ்வை கழிப்பது நிரந்தரமாக வேண்டும் என்பது,
2வது முகம் - மக்களுக்கு அனுதாபத்தை காட்டுவது
3வது முகம் - தோட்ட முதலாளிமார்களுடன் கடந்தகாலங்களில் கும்மாளம் அடித்ததும் அடிக்கபோவதும்
4வது முகம் - ஏனைய உங்கள் அரசியல் எதிரிகள் அமைச்சரவையில் வராது தடுப்பது.
5வது முகம் - கூட்டு ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக 1992 முதல் 2015 வரை பாதுகாத்து தற்போது போராட்டத்தில் கொழுந்து பறிப்பதை விடுத்து களையெடுத்து தோட்டநிர்வாகத்திற்கு வேதனம் இன்றி தொழிலாளர்களை ஏமாற்றுவது.
6வது முகம் - மஹிந்தவை பிரதமராக்க மலையக மக்களை பகடையாக்குவது.
2வது முகம் - மக்களுக்கு அனுதாபத்தை காட்டுவது
3வது முகம் - தோட்ட முதலாளிமார்களுடன் கடந்தகாலங்களில் கும்மாளம் அடித்ததும் அடிக்கபோவதும்
4வது முகம் - ஏனைய உங்கள் அரசியல் எதிரிகள் அமைச்சரவையில் வராது தடுப்பது.
5வது முகம் - கூட்டு ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக 1992 முதல் 2015 வரை பாதுகாத்து தற்போது போராட்டத்தில் கொழுந்து பறிப்பதை விடுத்து களையெடுத்து தோட்டநிர்வாகத்திற்கு வேதனம் இன்றி தொழிலாளர்களை ஏமாற்றுவது.
6வது முகம் - மஹிந்தவை பிரதமராக்க மலையக மக்களை பகடையாக்குவது.
இதை மக்கள் எதிர்பார்களா, ஏற்றுக்கொள்வார்களா? காலம்தான் பதில் கூற வேண்டும்.
மகா.
Geen opmerkingen:
Een reactie posten