தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்?

மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் உறுதியாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தம், அதிகாரத்தை பிரிக்கும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கோரிக்கை, எதிர்வரும் காலத்தில் ஏற்படவுள்ள சர்வதேச அழுத்தம் போன்ற காரணங்களில் சிங்கள பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும்பான்மை சிங்கள மக்களை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுத்துவதற்கு இக்குழு கலந்துரையாடல் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களின் சில தவறான தீர்மானங்களினால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசிய உறுப்பினர்களை பயன்படுத்தி எப்படியாவது எதிர்வரும் 2 வருடங்களில் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எப்படியிருப்பினும் இம்முறை தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினரின் எதிர்பார்ப்பாக இருப்பது 40 - 50 இடையிலான ஆசனங்களாகும்.
எனினும் அவர்களின் அடுத்தகட்ட வேலைத்திட்டமாக இருப்பது அரசாங்கத்தை நடத்தி செல்லும் போது குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படும் குறைப்பாடுகளை கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுத்தல்.
அமைச்சர் பதவிகள் கிடைக்காதவர்களை கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக தந்திரமான வேலைகளை செய்து (1958 - 59 காலத்தில் பண்டாரநாயக்க அரசாங்கத்திற்கு ஏற்படுத்திய அழுத்தத்தை உருவாக்குதல்) அனைத்து மாதங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்தல்.
இதன் போது பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரே நேரத்தில் 50 - 60 அளவிலான உறுப்பிர்களுக்கு எதிர்கட்சியில் பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களை இணைத்துக்கொண்டு அதன் ஊடாக அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுதல்.
இச்செயற்பாடுகள் இலகுவாக இடம்பெற்றால், தமிழ் முஸ்லிம் கட்சி மற்றும் சமமான கட்சிகளை போன்றவற்றிற்கு சீனா நிதி புலனாய்வு ஊடாக நிதி வழங்கி அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten