தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 juli 2015

தலைவரின் மனைவி மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்: கருணா


நடைபெறவுள்ள இலங்கை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலிலும் ஆசனம் இல்லாமல் , போட்டியிட வக்குமில்லாமல் அலையும் அநாதை தான் கருணா என்பது தற்போது பலரும் அறிந்த விடையம். இவரது பாதுகாப்பு நேற்று முன் தினம் முதல்(17) முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பயத்தில் தொடை நடுங்கி , தனது முன் நாள் சகாக்களை அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் முகாமிட்டுள்ளார் கருணா. இவர் ரணுலுக்கு தூதுமேல் தூது அனுப்பிக்கொண்டு இருக்கிறார். நான் மகிந்தரை பற்றிய உண்மைகளை கக்கி அனைத்தையும் மக்களிடம் சொல்கிறேன். ஆனால் எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை தாருங்கள் என்று காலில் விழுந்து கும்பிடுகிறான் கருணா. இது ஒரு புறம் இருக்க அவன் தெரிவித்துள்ள சில கருத்துக்களை பார்ப்போம்.
புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது. இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை. என்னுடன் இணைந்திருந்த போராளிகளை புலிகள் கொடூரமாக கொன்றார்கள். அதனால் தான் நான், புலிகளின் தலைமை அழிக்க , சிங்கள ராணுவத்துடன் இணைந்தேன். ஆனால் அது புலிகளின் தலைமையை அழிக்க மட்டும் தான். (இதனை இவர் கூறுவதே பிழை) காரணம் என்னவென்றால் புலிகள் இயக்கத்தை விட்டு கருணா பிரிந்து அரசுடன் இணைந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததன் பிற்பாடுதான் புலிகள் அவரது பகுதியை தாக்கி மீண்டும் கைப்பற்றினார்கள்.
சரணடைந்த போராளிகளை கொல்லவேண்டாம் என்றேன். கோட்டபாய ஓம் ஓம் என்று கேட்ப்பது போலக் கேட்டார். ஆனால் பலரை போட்டு தள்ளினார். பிரபாகரனது மகனை சுடவேண்டாம் என்று கூறினேன். ஆனால் அதனையும் அவர்கள் கேட்க்கவில்லை. சிறிய பாலகனை சுட்டுத் தள்ளினார்கள். இதுபோக அக்காவையும்(பிரபாகரனது மனைவி) அவர் மகளையும் கூட சுட்டுத் தள்ளினார்கள் என்று அதிர்ச்சியான தகவலை கருணா தற்போது கக்கியுள்ளார். அரசாங்கம் புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கின்றார்கள்‘ எனவும் தெரிவித்தார். அவை அனைத்தும் காற்றோடு போய் விட்டது.
ஆனால் இன்று என்னை சப்பித் துப்பிவிட்டார்கள். பொதுசனஐக்கிய முன்னணியில் எனக்கு இடம் தரவில்லை. கொலைகாரர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள். மட்டக்களப்பில் அக் கட்சிசார்பில் போட்டியிடுபவர்கள் பொதுமக்களைக் கொன்ற கொலைகாரர்கள். இதற்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும்‘ இவ்வாறு கருனா தெரிவித்துள்ளார். கருனாவுடன் நட்பாக இருந்த முன்னாள் சிங்கள அமைச்சருக்கு கருனா இவ்வாறு கவலையுடன் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten