[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 12:55.54 AM GMT ]
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன,
மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,
கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க,
துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க,
காணி அமைச்சர் எம்.கே.டி. எஸ்.குணவர்தன,
அமைச்சர் பியசேன கமகே,
உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம,
விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இறுதி நேரத்தில் நிராகரிக்கும் வேலைத்திட்டங்கள் கட்சிக்குள் இடம்பெறலாம். ஆனால், அதை எம்மால் அனுமானிக்க முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,
கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க,
துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க,
காணி அமைச்சர் எம்.கே.டி. எஸ்.குணவர்தன,
அமைச்சர் பியசேன கமகே,
உயர்கல்வி அமைச்சர் சரத் அமுனுகம,
விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே,
பிரதியமைச்சர்களான விஜய தஹநாயக்க,
சுதர்ஷினி பெர்னான்டோ புள்ளே,
ஹிருனிகா பிரேமச்சந்திர,
நியோமல் பெரேரா, ஏர்ள் குணசேகர,
அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்டுள்ளதுடன் இவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஆதரவாக நல்லாட்சி முன்னணியில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
சுதர்ஷினி பெர்னான்டோ புள்ளே,
ஹிருனிகா பிரேமச்சந்திர,
நியோமல் பெரேரா, ஏர்ள் குணசேகர,
அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்டுள்ளதுடன் இவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஆதரவாக நல்லாட்சி முன்னணியில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
நல்லாட்சியின் முன்னணி’ யின் கீழ் ஒன்றிணையும் இவர்கள் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.தே.கவில் போட்டியிடுகின்றனர்.
இந்தக் குழுவுக்கு மேலதிகமாக பிரதேச அரசியல் பிரதிநிதிகள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் மக்களுக்கு அன்று பெற்றுக்கொடுத்த நல்லாட்சி வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மேற்படி அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.
மேற்படி குழுவினர் கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று வதற்கு தாங்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஊழல் மோசடிகள் நிறைந்த ஆட்சிக் காலத்தைக் கடந்து ஜனவரி 8ஆம் திகதி 3 இலட்சத்தி 62 ஆயிரம் மக்களின் ஆதரவுடன் உருவாக்கிய அரசும், அந்த அரசின் நோக்கம் என்பவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் அதனூடாக மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவும் இந்தப் புதிய கூட்டணி விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியை தொடர்ந்தும் பாதுகாப்பதுடன் நல்லாட்சியை நாடு முழுவதும் நிலைநாட்டுவதற்கு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
திருடர்கள், கொள்ளையர்கள் என ஊழல் நிறைந்தவர்களுக்கு இந்தப் பொதுத் தேர்தலில் வேட்புமனு கொடுக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. சிவில் அமைப்புக்கள் பல தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது என்றும், இதனால் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி நல்லாட்சி முன்னணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சுதந்திரக் கட்சியின் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியின் கூட்டணியில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துமிந்த திஸாநாயக்கவை தவிர ஏனைய அனைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் போடடியிட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அணியை தோற்கடிக்க கூடியளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வியாங்கொட குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களை திரும்ப பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
மஹிந்த இறுதி நேரத்தில் நிராகரிக்கப்படலாம்! அனுமானிக்க முடியாது!
[ சனிக்கிழமை, 11 யூலை 2015, 01:31.37 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் முடிவுகள் இறுதி நேரத்தில் மாறலாம் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் மஹிந்த ஆதரவு அணியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான கட்சியாகவும் பிளவுபடாத கட்சியாகவும் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்தது.
அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மைத்திரி- மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் மஹிந்த ஆதரவுக் கூட்டணியை உருவாக்கி தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தோம்.
இவ்விரண்டு நோக்கங்களும் இன்று நிறைவேறியுள்ளன. கட்சியையும் ஒன்றினைத்து மஹிந்த ராஜபக் ஷவையம் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளோம். இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
அதேபோல் ஜனாதிபதி எமது தீர்மானத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தேர்தலில் களமிறக்கி கட்சிய வெற்றிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முடிவில் அவர் உள்ளார்.
ஆனால் கட்சிக்குள் ஒருசிலர் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில் மஹிந்தவின் மீள் பிரவேசத்தை தடுக்க நினைக்கின்றனர். அதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் ஏன் இவர்கள் இவ்வாறு நடக்கின்றனர் என்பது எமக்கு தெரியவில்லை.
முன்னைய ஆட்சியின் போது இவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முக்கிய இடம் கொடுத்து வைத்திருந்தார். இவர்களே கடந்த ஆட்சியில் முக்கிய நபர்களாக செயற்பட்டனர். பல தீர்மானங்கள் இவர்களின் அனுமதியுடன் தான் மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டார். அவ்வாறு இருக்கையில் ஏன் இப்போது இவ்வாறு நடக்கின்றனர் என்பது எமக்கு தெரியவில்லை. அனுமானிக்கவும் கடினமாகவே உள்ளது.
அதேபோல் இறுதி நேரத்தில் மஹிந்தவை நிராகரிக்கும் கதைகளை இவர்கள் கூறுகின்றனர். இதற்கும் என்னால் தெளிவான பதிலை குறிப்பிட முடியாது. கட்சியில் மஹிந்த போட்டியிடுவர் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்புமனுவிலும் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
ஆகவே இவை அனைத்தும் ஜனாதிபதியின் அனுமதியுடன் தான் நடைபெற்றன. இந்த நிலையில் மஹிந்தவை மீண்டும் நிராகரிக்க ஏதேனும் திட்டம் இருக்குமா என்பதை எம்மால் அனுமானிக்க முடியாது.
எனினும் அவ்வாறு ஏதேனும் இருக்குமாக இருந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும் என்பதையும் ஜனாதிபதி தெரிந்து கொள்ள வேண்டும்.
கட்சியை ஒன்றிணைத்து பலமான கட்சியாக களமிறங்குவது என்பதே எம் அனைவரினதும் தீர்மானமாகும். அதை யாரும் சீரழிக்க ஜனாதிபதி இடமளிக்க மாட்டார் எனக் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten