தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிப்பர்

மைத்திரி அதிரடி! ராஜித உள்ளிட்ட ஐந்து பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 09:32.11 AM GMT ]
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட ஐந்து பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கட்சி உறுப்புரிமையை ரத்து செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, எஸ்.பி.நாவீன்ன, ஹிருனிகா பிரேமசந்திர, எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரின் உறுப்புரிமை இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyHRcSVmo2J.html

தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிப்பர்
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 11:47.43 AM GMT ] [ வலம்புரி ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை பெரும்பாலானவர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை.யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு சில சான்றாதாரங்கள் தேவை.
இதற்கப்பால் முன்பு வாக்களித்து நாம் கண்டது என்ன என்ற கேள்வியும் வாக்களிப்பில் ஒரு மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் மனச்சோர்வு-வாக்களிப்பதில் காட்டும் அசமந்தம் எதுவும் பாராளுமன்றத் தேர்த லைப் பாதிக்காது.100 பேர் வாக்களித்தாலும் போதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு.எனவே வாக்களிப்பதற்கு மனம் விரும்பவில்லை என்ற வெறுப்பு நிலையை தொடரவிட்டால் இன்னும் மோசமான சூழ்நிலை வந்துவிடலாம். எனவே வாக்களிப்பது என்பது மிகவும் முக்கியமானது.
இதுபற்றி முன்பும் இவ்விடத்தில் பிரஸ்தாபித்துள்ளோம். எனினும் கடந்த காலத் தேர்தல்களில் தமிழ் மக்கள் விட்ட தவறு என்ன என்பது குறித்து ஆராய்ந்தால்; தங்களின் அரசியல் தலைமை என்று நினைத்து தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தனரோ அந்தத் தமிழ்த் தலைமையை கட்டுப்படுத்த,கண் காணிக்க, அதன் செயற்பாடு தொடர்பில் ஆராயக் கூடிய இன்னுமொரு சக்தியை நாம் பாராளுமன்றம் அனுப்பாமல் விட்டது மிகப் பெரும் தவறாகும்.
அதாவது, ஒரு குழுவிடம்- அணியிடம் - கூட்டிடம் முழுப் பொறுப்பையும் வழங்கிவிட்டு அவர்கள் செய்வார்கள் என்று தமிழர்கள் பேசாமல் இருந்ததுதான் மிகப் பெரிய தவறு.
நாம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய குழுவின்- அணியின் - கூட்டின் செயற்பாடு எங்ஙனம் உள்ளது என்பதை அறிவதற்கு இன்னுமொரு பலமான சக்தியை தமிழர்கள் தோற்றுவித்திருக்க வேண்டும்.
அப்படியயாரு நிலைமை இருந்திருக்குமாயின்; தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே மிகவும் நிதானமாக நடந்திருப்பர். ஆனால் நாம் அது பற்றிச் சிந்திக்கவில்லை.
எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்தித்து செயற்படுவதற்கான ஒரு களம் எனலாம்.
ஒரு பகுதியிடமே தங்கள் பிரதிநிதித்துவத்தைத் தாரை வார்த்துக் கொடுக்காமல் அவர்களை இவர்கள் மேற்பார்வை செய்வர். இவர்களை அவர்கள் மேற்பார்வை செய்வதென்பதான ஒரு பலமான சூழமைவை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அதாவது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றலாம்; அங்கொரு கதை; இங்கொரு கதை விடலாம் என்ற நினைப்பு எவரிடமும் இல்லாமல் போய், அடுத்த தேர்தலிலும் நாம் வெல்லவேண்டுமாயின் மக்கள் பணி செய்ய வேண்டும்; நேர்மையாக நடக்க வேண்டும் என்ற நிலைமை தோற்றுவிக்கப்படும்.
அதேசமயம் பலமான அணிகள் தமிழர்களின் உரிமை விடயத்தில் ஒன்று சேர்ந்து முடிவுகளை எடுக்கும்போது உண்மைநிலைமைகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.இதைவிடுத்து ஒரு அணியிடம் முழுவதையும் கொடுத்தால் அவர்கள் பேசுவார்கள்.அது வெளிவராது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தலைவருக்கு மட்டுமே பேசிய விடயம் தெரியும்.அந்த அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே எதுவும் தெரியாமல் போகும்.இதுவே யதார்த்தம்.
எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என்பது நியாயமானது. ஆனால் மறைத்ததால் நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்று கேட்கும்போது, உங்கள் இரகசியம் சுயநலத்திற்கானதென்றாகி விடுகின்றது.
ஆகையால் நேர்மையான - தமிழினத்திற்கு விசுவாசமானவர்கள் வெவ்வேறு அணிகளில் இருந்தாலும் அவர்கள் பாராளுமன்றம் செல்லவேண்டும்.அதுவே தமிழ் அரசியல் தலைமைகள் தமிழினத்தோடு நிற்பதற்கான கடிவாளமாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyHRcSVmo3F.html

Geen opmerkingen:

Een reactie posten