தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 juli 2015

தமிழர்களின் உரிமைப்பிரச்சினை தீர்க்கப்படும் என்பதில் நம்பிக்கையில்லை! முன்னாள் பா.உ.பொன்.செல்வராசா



தமிழர்களின் இனப்பிரச்சினை உள்ளூர்பொறிமுறையில் தீர்க்கப்படும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை அது சர்வதேச பொறிமுறையிலே தீர்க்கப்படவேண்டும் என்பதிலேயே தமிழத்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் இருக்கின்றனர்.
துறைநீலாவணையில் நேற்று மாலை அப்பிரதேச மக்களுடனான சந்திப்பு வை.எம்.சி.ஏ கட்டிடத்தில் இடம்பெற்ற போது முன்னாள் தமிழத்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அதில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2009 ஆண்டு மே மாதம் 19 திகதி வட கிழக்கில் யுத்தம் மௌனித்த பிறகும் இந்த நாட்டில் ஒரு அரச பயங்கரவாதம் புரையோடிக் காணப்பட்டது.  இதனை யாராலும் மறந்துவிடமுடியாது;

யுத்தம் முடிவுற்றாலும் இந்த அரச பயங்கரவாதம் இளைஞர்களையும் யுவதிகளையும் கடத்திக் கொன்று குவித்தது மட்டுமல்ல இரகசிய முகாங்களிலே கடத்தப்பட்டவர்களை வைத்திருந்தது. சித்திரவதை செய்தனர். இவ்வாறான ஒரு நிலையினால் இளைஞர்கள் மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.

இந் நிலையிலேதான் 2010 ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

மனம் நொந்துபோய் இருந்த தமிழ்மக்கள் நடைபெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை நிருபித்திருந்தார்கள்.

இதன் பின்னர்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலே பராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் பலசுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன. இதில் தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான முன்னெடுப்பாகும் என்பதை மகிந்த அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தியும் அதனை ஏற்காத மகிந்த அரசாங்கம் பேச்சுவார்த்தையினை முறித்துக்கொண்டது .

இவ்வாறு உள்நாட்டிலே பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு நடைபெற்ற பொறிமுறைகளாகும் இந்தப்பொறிமுறைகளை அரசாங்கம் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தி தீர்வை வழங்காது என்பதை அறிந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் மத்தியில் எம்முடைய பிரச்சினையை எடுத்துச்சென்றது.

சுர்வதேசத்திடம் சென்றதன் பயனாக அமெரிக்கா தமிழ்மக்களின் பிரச்சினையை ஐ.நாவில் கொண்டுசெல்லத் தீர்மானித்தது. அதில் தமிழர்களின் பிரச்சினை ஒரு பிரேரணையாக ஐ.நாவில் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த நிலையில் இலங்கை அரசாங்கம் ராஜபக்ச காலத்தில் சர்வதேசத்திடம் இருந்து பின்வாங்கியதைக் கண்டோம்.

பின்வாங்கியதற்குப் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் ஏடுக்கப்பட்டு வருகினறன. கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிக்கை வெளிவர இருந்தாலும் கூட புதிய தலைவராக மைத்திரிபால இந்த நாட்டில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 

அவரின் கோரிக்கைக்கு ஏற்ப அந்த அறிக்கை வெளிவருவதை செப்டெம்பர் வரை ஒத்திவைத்தார்கள். இதற்கிடையில் புதிய அரசாங்கம் இந்தப் இனப்பிரச்சனைக்கு உள்ளூர்பொறிமுறையில் தீர்வு காணவேண்டும் என்ற முற்போக்கு சிந்தனையினை வெளியிடடு இருந்தார்கள் . ஆனால் மக்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதனை ஏற்கத் தயாரில்லை.  ஏனென்றால் உள்ளூர் பொறிமுறைகளெல்லாம் நடைபெற்றும் அது முடிவுறாத விடயங்களாகவே இருந்தது. இதனை நீங்கள் அறிவீர்கள். ஆகவே சர்வதேச பொறிமுறையே பொருத்தமுடையது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட இருக்கிறது.  இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தேர்தலில் பேரம்பேசும் சக்தியாக மாற்றவேண்டும் அதேவேளை தமிழ்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் மூன்றாம் நிலையை அடைகின்றபோதுதான் பேரம் பேசும் சக்தியாக வரமுடியும். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வடகிழக்கில் அதிகப்படியான ஆசனங்களைப் பெறவைக்கவேண்டும் இது இக்கட்டான காலம் இதனை தவறவிட்டால் இச்சந்தர்ப்பம்
இனிவராது. ஆகையால் தமிழ்மக்கள் சிந்தித்து செயற்படவேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

இந்நிலையில் கடந்த ஜநாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபாலவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காகவும் மகிந்தவை தோக்கடித்த வீட்டுக்கு அனுப்பவும் சிறுபான்மை இனம் பாடுபட்டது. இந்நிலையில் பதிய ஜனாதிபதியின் தலைமையில் இருக்கும் கட்சி வீட்டுக்கு அனுப்பியவரை மீண்டும் சேர்த்திருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. இது புரியாத புதிராக இருக்கிறது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten