தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்புத் திருமணம் என்ற இரண்டு நடவடிக்கைகலும் ஒரே நேரத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில்தான் வடக்கில் இன்று தீவிரமாக இடம்பெறும் பாலியல் வன்புணர்வுகளையும் துஷ்பிரயோகங்களையும் அணுகவேண்டும்.
யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணாவி வித்யா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வடக்கு கிழக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் எதிர்ப்புக்கள் வெளீயிடப்படுகின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். ஆனால் இந்த விடயத்தையும் ஒரு அரசியலாகவும் இதன் ஊடாக கடந்த காலத்தில் திகழ்ந்த சில கொடூரங்களை மறைக்கும் அரசியலையும் சிலர் செய்ய முனைகின்றமை அபாயகரமானது. வித்யாவுக்கான போராட்டம் என்பதும் வித்யாக்களுக்கான நீதி என்பதும் ஆழமான ஒரு புரிதலுடன் முன்னெடுக்கப்பட வேண்டியதும் வென்றெடுக்கப்பட வேண்டியதுமாகும்.
வித்யா பாலியல் வன்புணர்வுப் படுகொலை புங்குடுதீவில் நடந்த மூன்றாவது சம்பவம் ஆகும். இதற்கு முன்னர் சாரதாம்பாள் 1999ம் ஆண்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 2005ம் ஆண்டில் தர்சினி என்ற பெண் கடற்படையால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேற்குறித்த இரண்டு படுகொலைகளும் அரசியல்ரீதியாக பெரும் விளைவுகளை உருவாக்கிய படுகொலைகள். வித்யாவில் படுகொலை குறித்து ஆராயும் ஒருவருக்கு மேற்குறித்த இரண்டு படுகொலை பற்றிய புள்ளிவிபரங்களும் தவிர்க்க இயலாது.
வடக்கில் போரின் பின்னர் இராணுவத்தரப்பால் பாலியல் வன்புணர்வுகளும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஊடகப்பலத்திற்கும், பொதுவெளிக்கும் வெளிவராத பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
2012ம் ஆண்டில் நெடுந்தீவில் சிறூமி ஒருத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இன்றுவரை அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.
அரசியல் ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்த நபர் இந்தக் கொலையில் தொடர்புபடுவதன் காரணமாக அவர் இந்த வழக்கிலிருந்து தப்பிக்கொண்டே இருக்கிறார். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடிக்கொண்டிருக்கும் குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
காரைநகரில் 11 வயதான பாடசாலைச் சிறுமி கடற்படைச் சிப்பாயால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாள். அந்தச் சிறுமி தொடர்ச்சியாக 11 தினங்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாள்.
அத்துடன் அதே இடத்தில் 9 வயதுச் சிறூமி ஒருத்தியும் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாள்.
அத்துடன் அதே இடத்தில் 9 வயதுச் சிறூமி ஒருத்தியும் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாள்.
அங்கும் குற்றவாளி தண்டிக்கப்படாமல் நீதி மறுக்கப்பட்டது. சிறுமிகள் தம்மை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களை அடையாள அணிவகுப்பில் தேர்வுசெய்யும் ஒரு சூழல் ஏற்பட்டது.
எத்தகைய கொடுமை?
வன்னியில் நெடுங்கேணி சேனைப்பிலவில் இராணுவ சிப்பாய் ஒருவர் சிறுமி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியிருந்தார். பாலியல் வல்லுறாவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பாழடைந்த கிணற்றுப் பற்றை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டார்.
அத்துடன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய இராணுவச் சிப்பாயை நீதிமன்றத்தில் அவள் அடையாளம் காட்டியிருந்தார். பிரதேசத்து மக்கள் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். எனினும் குற்றவாளி தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வன்னியில் மாங்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த சரண்யா என்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையால் சாவடைந்தாள். அவளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் அம்மம்மா வழக்குத் தொடுத்தார். அவள் அவ்வாறு பாலியல் வன்புணர்வால் மரணமடையவில்லை என்று பிரேதப் பரிசோதனை கூறுகிறதாம். போருக்கும் பிந்தைய வன்னியில் இவ்வாறு பல துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி பரந்தனில் சிறுமி ஒருத்தி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் சிறுமி ஒருத்தி சடலமாக மீட்கப்பட்டாள். இந்த சம்பவங்கள் கிளிநொச்சியை மாத்திரமல்ல தமிழர் பகுதியையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.
வடக்கில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 14 நாட்களுக்குள் 10 சிறுமியர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை கல்வி அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
போரால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் காணப்படுகிறது. குறிப்பாக பெளதீகரீதியாக மாத்திரமின்றி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படிருக்கிறது. இந்தப் பாதிப்புக்களைத் தாண்டியும் தமது இருப்புத் தொடர்பிலும் யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரும் வகையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை போராட்டமாக்கி வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்ச் சமுகத்தை திட்டமிட்டரீதியில் சிதைக்கவும் அதன் கவனங்களை திசை திருப்பவும் தந்திரோபாயமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது நடக்கும் சம்பவங்கள் உண்மையில் சமூகச் சீரழிவா? அல்லது திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறதா? அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக இவை நடைபெறுகின்றனவா? அல்லது சீரழியும் ஒரு சூழல் உருவாக்கப்படுகிறதா? என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உண்டு.
இவற்றை உரியமுறையில் அணுகி அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வித்யாவைச் சீரழித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன் அதன் பின்னணி குறித்தும் ஆராய வேண்டும்.
அத்துடன் வடக்கில் சீரழிக்கப்பட்ட பல வித்தியாக்களுக்கும் நீதி வழங்க வேண்டும். பாலியல் வல்லுறவு என்பது ஒடுக்கும் ஒரு ஆயுதமாக ஆண் பெண்ணை வெல்ல நினைக்கும்போதும் சரி, ஓர் இனம் இன்னொரு இனத்தை வெல்ல நினைக்கும்போதும் சரி இதனை ஓர் ஆயுதமாக்குகிறது. அவமானப்படுத்துதல், அழித்தல்முதலிய கொடூர நோக்கங்கள் பாலியல் வன்புணர்வின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றன. வித்யாவுக்கு நீதி வழங்கும் அதேவேளை இசைபிரியாக்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்றகோரிக்கை வடக்கில் தமிழ்ச் சமூகத்திடமிருந்து மாத்திரமல்ல தெற்கிலிருந்தும் எழுந்திருக்கிறது.
அத்துடன் வடக்கில் சீரழிக்கப்பட்ட பல வித்தியாக்களுக்கும் நீதி வழங்க வேண்டும். பாலியல் வல்லுறவு என்பது ஒடுக்கும் ஒரு ஆயுதமாக ஆண் பெண்ணை வெல்ல நினைக்கும்போதும் சரி, ஓர் இனம் இன்னொரு இனத்தை வெல்ல நினைக்கும்போதும் சரி இதனை ஓர் ஆயுதமாக்குகிறது. அவமானப்படுத்துதல், அழித்தல்முதலிய கொடூர நோக்கங்கள் பாலியல் வன்புணர்வின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றன. வித்யாவுக்கு நீதி வழங்கும் அதேவேளை இசைபிரியாக்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என்றகோரிக்கை வடக்கில் தமிழ்ச் சமூகத்திடமிருந்து மாத்திரமல்ல தெற்கிலிருந்தும் எழுந்திருக்கிறது.
வித்யாவின் பாலியல் வன்புணர்வுப் படுகொலையை கண்டித்துப் போராடுவது என்பதும் அரசியலாகிவிட்டது. சில பிரதேசங்களில் தமது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தத கட்சி,அமைப்புகளின் போட்டிகளை தீர்க்க போட்டி போட்டுக்கொண்டு வித்யாவுக்கான போராட்டங்களில் ஈடுபடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். வாய் ழூடி வாழும் பல வித்யாக்களைஉருவாக்கியவர்கள் கூட இவ்வாறான போராட்ங்களை அதன் அர்த்தம் புரியாது நடத்துகின்றனர். ஆக தமது சுய அரசிலுக்காக அவர்கள் இதனைக் கையில் எடுத்துள்ளனர்.
நிச்சயமாக இப்படியானவர்களால் சரண்யாகளுக்காக போராட முடியவில்லை. சௌகரியமான போராட்டங்களில் ஈடுபட நினைக்கும் இவர்களைப் போன்றே சில அரசியல்வாதிகளும்இப்போது செயற்படுகின்றனர். இலங்கை ஒரே நாடு என்பதை வித்யா உணர்த்தியுள்ளதாக ஆனந்தசங்கரி கூறுகிறார். இவரும் சரண்யாக்களுக்காவோ, இசைப்பிரியாக்களுக்காகவோகுரல் கொடுத்தவரல்ல. வித்யாவின் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருந்தார். இந்தப் பயணம் ஒரு அரசியல் நோக்கிற்கானதுஎன்பதே எனது பார்வை.
வித்யாவுக்காக வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இசைப்பிரியாக்களும் நீதி வழங்குவாரா? வித்யாக்களும் இசைப்பிரியாக்களும் வேறு வேறு நோக்கங்களுக்காசீரழிக்கப்பட்டு பலியிடப்பட்டிருந்தாலும் எல்லாமே அநீதியின் பாற்பட்டதே. இசைப்பிரியாக்களையும், சரண்யாக்களையும் மறைக்கும் விதமாகவே ஜனாதிபதியின் பயணம் அமைந்தது.
இசைப்பிரியாக்களுக்காவும், சரண்யாக்களுக்காவும் காரைநகர், நெடுந்தீவு சிறுமிகளுக்காகவும் தமிழ் மக்கள் போராட முடியாத சூழல் அன்று உருவாக்கப்பட்டது. இன்றைக்குவித்யாவிற்காக குரல் கொடுக்கும் பெண் அமைச்சர்கள் இசைப்பிரியாக்களுக்காக மட்டுமல்ல தீவுச் சிறுமிகளுக்காகக்கூட அன்று குரக் கொடுக்கவில்லை.
ஈழ இனப்படுகொலை யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான இசைப்பிரியாக்கள் இனவெறிப் பாலியல் வன்புணர்வாலர்களால் வேட்டையாடப்பட்டனர். சரணடைந்த பெண் போராளிகள், சரணடைந்த பொதுமகள்கள், சிறுமியர்கள் இனப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆண் போராளிகளும் பெண்மகள்களும்கூட நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வதைக்குஉள்ளாக்கப்பட்ட்னர். இனவாத நோக்கில் தமிழ் இனம் கூட்டு அவமானப்படுத்தப்பட்டது. அதற்கு எதிராக உலகமெங்கிலும் குரல்கள் ஒலிக்கின்றன. இலங்கையில் இத்தகைய அநீதிக்குஎதிராக போராடும் சூழலிருந்தால் எத்தகைய போராட்டங்கள் நடந்திருக்கு?
பாலியல் வன்புணர்வு செய்யும் வெறியாளர்கள் இனப் பாலியல் வன்புணர்வு வெறியர்களுக்குப் பின்னால் தமது குற்றங்களை மறைக்கிறார்கள். இனவெறிப் பாலியல் வன்புணர்வாளர்கள்பாலியல் வன்புணர்வாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக மாறுகிறார்கள். பாலியல் வெறிநாயைவிட இனப்பாலியல் வெறிநாய்தான் அபாயகரமானது எனக் குறிப்பிடும் காட்டூனிஸ்ட் அவத்தஆட்டியை இனவெறி நாயானது, பிறந்த பிறக்கப்போகும் நூறாயிரம் சிறுமியர் எதிர்காலத்தில் வன்புணர்வுக்கு உள்ளாகக்கூடிய அடித்தளத்தினை நிகழ்காலத்தில் அமைத்துக்கொடுக்கின்றது என்கிறார்.
இனவெறிப் பாலியல் வன்புணர்வாளர்களை பாதுகாத்துக்கொண்டு வித்யாக்களை காப்பாற்ற முடியாது. இசைப்பிரியாக்களுக்கு நீதி வழங்குவதன் ஊடாக வித்யாக்களையும்சரண்யாக்களையும் காப்பாற்ற முடியும். நீதி என்பது ஒன்றே.
- தீபச்செல்வன் -
குமுதம்
குமுதம்
http://www.tamilwin.com/show-RUmtyHTbSUeu7F.html
Geen opmerkingen:
Een reactie posten