தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 juli 2015

எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா?: யாழில் போராட்டம்



வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்களை கண்டறிந்து தருமாறுகோரி இன்றைய தினம் யாழ்.நல்லூர் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 11 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே, நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத் தருவாயா?, தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம், எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.




எமது கட்சியே கனடாவில் ஆட்சியமைக்கும்! ஈழத்தமிழர்களிற்காக தொடர்ந்து செயற்படுவேன்: ராதிகா சிற்சபைஈசன்
[ செவ்வாய்க்கிழமை, 28 யூலை 2015, 04:46.30 AM GMT ]
ஈழத்தமிழர்கள் எனது உறவினர்கள், சகோதர, சகோதரிகள். யார் என்ன சொன்னாலும் நான் அவர்களிற்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயங்கப் போவதில்லை.
எனது நடவடிக்கைகளைக் கண்டித்த அரச தரப்பை நான் எள்ளளவும் கருத்தில் எடுக்கவில்லை.
ஒக்டோபர் மாதம் இடம்பெறும் கனடியத் தேர்தலில் எங்களது கட்சியே ஆட்சியமைக்கும் என்பதை கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன.
மக்கள் எங்களின் பின்னால் திரண்டு விட்டார்கள் என லங்காசிறியின் 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten