தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 juli 2015

சமஷ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது, சிங்கள மக்களோடு தமிழர்களை சேர்ந்து வாழ அழைக்கிறார் சம்பிக்க! ]

சமஷ்டி கொள்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைவிட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் சமஷ்டியை விட்டு பெரும்பான்மை சிங்கள மக்களோடு இணைந்து வாழ வரவேண்டும் என்றும் அவர் அந் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
30 வருடங்களாக நடந்த உள்நாட்டுப் போரினால் தமிழ் மக்களின் சமூக - பொருளாதார கட்டமைப்புக்களை விருத்தி செய்யவேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது. எமது நாடு பெளத்த மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியமைக்கப்பட்டது.
அனைத்து மக்களும் மதங்களும் சமம் என்பதையே பெளத்தம் வலியுறுத்துகிறது.
ஆகவே நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுத்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வர வேண்டும் எனவும், தமிழ் மக்கள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ முன்வரவேண்டும் என்றும் அவர் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten