சுவிட்சர்லாந்து குடிமக்களின்
வசிப்பிடங்களுக்கு அருகே அகதிகளின் முகாம்கள் அமைத்துக்கொள்வதற்கு எந்த
எதிர்ப்பும் இல்லை என அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரெஞ்ச்
மொழி பத்திரிகையான Hebdo அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சுவிஸ்
குடிமக்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு அருகே அகதிகள்
முகாம்கள் அமைத்துக்கொள்வதற்கு தாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க
மாட்டோம் என கூறியுள்ளனர்.
சுமார் 1,220 நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் 54.1 சதவிகித மக்கள்
தங்கள் வீடுகளுக்கு அருகே அகதிகள் முகாம்கள் அமைப்பதற்கு ஆதரவு
அளித்துள்ளனர்.
மக்களின் இந்த கருத்து குறித்து பேசிய சுவிஸ் அகதிகள் கவுன்சிலை சேர்ந்த
அதிகாரியான Stefan Frey கூறுகையில், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே
அகதிகள் முகாம்கள் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என சுவிஸ்
மக்கள் கட்சி உள்பட ஏனைய கட்சிகள் கூறிவந்த கருத்துக்கு எதிராக தற்போது
மக்கள் வாக்களித்துள்ளனர் என்றார்.
ஆய்வின்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஜேர்மன் மொழி பேசும் 57
சதவிகித மக்களும், பிரெஞ்ச் மொழி பேசும் 46 சதவிகித மக்களும் அகதிகளுக்கு
ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அகதிகள் முகாம்கள் அமைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏனைய விடயங்களில் உதவி செய்யவும் சுவிஸ் மக்கள் தயாராக உள்ளனர்.
குறிப்பாக, 67 சதவிகித மக்கள் அகதிகளுக்கு மொழி கற்று தர உதவுவோம்
என்றும், 62.5 சதவிகித மக்கள் அகதிகளுக்கு உணவு அளிப்போம் என்றும், 58.2
சதவிகித மக்கள் ஓய்வு நேரங்களில் அகதிகளுடன் இணைந்து பயனுள்ள செயல்களில்
ஈடுபடுவோம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், வீடுகளுக்கு அருகே மட்டுமல்லாமல், தங்களுடைய வீடுகளிலேயே தஞ்சம்
அளிக்க சுமார் 20 சதவிகித மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
12.6 சதவிகித மக்கள் ஒரு அகதியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தங்களது
வீடுகளில் தங்கிக்கொள்ள அனுமதி அளிப்போம் என கூறியுள்ளது இந்த ஆய்வு மூலம்
தெரியவந்துள்ளது.
http://www.coolswiss.com/view.php?22eOld0bcQa0Qd4e3yMC302cBnB2ddeZBnp303egAA2e4K0asacb3lOo43
|
Geen opmerkingen:
Een reactie posten